புதன், 26 டிசம்பர், 2012

முத்துக்குமரன் நினைவு அறக்கட்டளை




 மனிதனுக்கான குணத்தையும், மக்கள் பிரதிநிதிக்கான குணத்தையும் கொண்டவருக்காக




 புதுக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்(இ.கம்யூ.) எஸ்.பி.முத்துக்குமரன் 1.4.2012-ல் விபத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது பெயரில் அவரது சொந்த ஊரான வடகாடு அருகேயுள்ள நெடுவாசலில் 26.12.2012 -ல் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையை தொடர்புகொள்ள விரும்பினால் 9159585300, 9626253373, 9715185913 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவிக்கரம் நீட்டலாம்..
   
                                                                             
     


திங்கள், 24 டிசம்பர், 2012

வடகாட்டில் மாநில அளவில் கைப்பந்துபோட்டி அன்புத்தங்கம் அணிக்கு முதல்பரிசு


புதுக்கோட்டை மாவட்டம      வடகாடு அன்புத்தங்கம் கைப்பந்து கழகத்தின் முன்னாள் வீரர் டி.ஏ.எஸ்.டி. தர்மராஜ் நினைவாக இரண்டு நாள் பகல், இரவாக கைப்பந்து போட்டி நடைபெற்றது. சுழற்சி முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம், கேரள மாநிலத்தில் இருந்து 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். இப்போட்டியில் தகுதிச்சுற்றில் நாக்அவுட் முறையும், பரிசுக்கான தேர்வில் லீக் முறையும் பின்பற்றப்பட்டது. ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல்பரிசு பெற்ற வடகாடு அன்புத்தங்கம் அணிக்கு  ரூ. 10 ஆயிரத்து ஒன்றும், இரண்டாம் பரிசு பெற்ற திருவாரூர் அணிக்கு ரூ. 8 ஆயிரத்து ஒன்றும், மூன்றாம் பரிசு பெற்ற திருச்சி காவல் துறை அணிக்கு  ரூ. 6 ஆயிரத்து ஒன்றும், நான்காம் பரிசு பெற்ற மேற்பனைக்காடு அலெக்ஸாண்டர் அணிக்கு ரூ. 4 ஆயிரத்து ஒன்றும், ஐந்தாம் பரிசு பெற்ற கேரளா அணிக்கு ரூ. 3 ஆயிரத்து ஒன்றும், ஆறாம் பரிசு பெற்ற வடகாடு அன்புத்தங்கம் சிறுவர் அணிக்கு ரூ. 2 ஆயிரத்து ஒன்றுடன் தர்மராஜ் நினைவுக் போப்பையும் வழங்கப்பட்டது.
     மேலும், மகளிர் பிரிவில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி முதல் பரிசையும், முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாம் பரிசையும், வடகாடு மகளிர் அணி மூன்றாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற இந்த அணிகளுக்கும் ரொக்கத்தொகையுடன் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு சுற்றிலும் தனித் திறமையை வெளிப்படுத்திய வீரருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
 
மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்துப்போட்டியில் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்ற கீரமங்கலம் மகளிர் பள்ளி அணிக்கு பரிசு வழங்கியபோது எடுத்தபடம்

புதன், 19 டிசம்பர், 2012

விபத்தில் காயம் அடைந்த புதுமாப்பிள்ளை பலி துக்கம் விசாரிக்க வந்த உறவினர் அதிர்ச்சியில் பலியானார். திருமணமாகி 15 நாளில் நடந்த பரிதாபம்



புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் திருமணமாகி 15 நாளில் விபத்தில் காயம் அடைந்த புதுமாப்பிள்ளை இறந்தார். துக்கம் விசாரிக்க வந்தவர் அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வடகாடு ஊராட்சி பரமநகர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன். இவரது மகன் இளங்கோவன்(31). இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகள் தனம் ஆகியோருக்கும் நவ.30-ம் தேதி வடகாட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வருதற்காக டிச. 14-ம் தேதி மோட்டார் சைக்கிளில் இளங்கோவன் சென்றுள்ளார். அப்போது, அம்மையாண்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இளங்கோவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான சூழலில் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்ற இளங்கோவன் புதன்கிழமை இறந்தார்.
    இறந்தது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தாடிவயல் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் வடகாடுக்கு இளங்கோவன் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்த உறவினர்களுடன் இவரும் அழுது உருண்டு புறண்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 அவசர வாகனம் வரவழைக்கப்பட்டு அதன்மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  சிறிது நேரத்தில் ஜெயபால் இறந்துவிட்டார். இறந்த ஜெயபால் விபத்தில் இறந்த  இளங்கோவனின் மனைவி தனத்தின் உறவினராவார். புதுமாப்பிள்ளை இறந்ததும், அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து உறவினர் இறந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

செவ்வாய், 18 டிசம்பர், 2012

வடகாட்டில் இருபாலருக்கான கைப்பந்து போட்டி



வடகாட்டில் இருபாலருக்கான கைப்பந்து போட்டி
 டிச.22-ல் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஆண்கள், பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி டிச. 22-ம் தேதி தொடங்கி இரண்டு நாள் இரவு பகலாக நடக்கிறது.
    வடகாடு அன்புத்தங்கம் கைப்பந்து கழகம் சார்பில் இரண்டு நாள் பகல், இரவாக தகுதியான நடுவர்களைக்கொண்டு கைப்பந்துபோட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் அணியினருக்கு உணவும், வெளியூர் அணிகளுக்கு பயணப்படியும் வழங்கப்படும். போட்டியின் தொடக்க நாளில் முன்பதிவு செய்து கலந்துகொள்ளும் அணிகளுக்கு மட்டுமே மறுநாள் ஆட்டத்துக்கு அனுமதிக்கப்படும்.   மேலதிக தகவல்களுக்கு
 97864 41050, 96261 31965 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 15 டிசம்பர், 2012

மும்முனைமின்சாரம் அதிகரிக்கும்..

  படவிளக்கம்: வெண்ணாவல்குடியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குகிறார் கு.ப. கிருஷ்ணன்



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் விவசாயத்தை பாதுகாக்க 3 மணி நேர மும்முனை மின்சாரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி வழங்க டிசம்பர்- 2012-க்குள் உத்தரவு கிடைக்குமென எம்எல்ஏ கு.ப. கிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

வியாழன், 13 டிசம்பர், 2012

வாடுவது பயிரல்ல. நம் வயிறு..

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கருகும் நெல் பயிர். அரசு ஆதரவுக்கரம் நீட்டுமா? 

புதன், 12 டிசம்பர், 2012

மலரும் பாரதியார் நினைவுகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதி வடக்கு அரசு தொடக்கப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள்விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அதில் மாணவ, மாணவிகள் பாரதியார் போல் வேடம் அணிந்து  அசத்தினர்

வெள்ளி, 7 டிசம்பர், 2012

தோழமைக்கு கிடைத்த மரியாதை




   புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் மறைந்த எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன்(இந்திய கம்யூனிஸ்ட்) தொகுதி நிதியில் கட்டப்பட்ட நுழைவாயை திறந்து வைக்கிறார் அவரது மனைவி சுசீலா.உடன் தற்போதைய எம்எல்ஏ கார்த்திக்தொண்டைமான். முதல்வர் கார்த்திகேயன் உள்ளிட்டோர்.

தஞ்சை, புதுகை மாவட்ட எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்





படவிளக்கம்: புளிச்சங்காடு-கைகாட்டியில் நிறுத்தப்பட்ட பேருந்து, சரக்கு வாகனங்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைகோடி பகுதியாகவும் தஞ்சை மாவட்டத்தின் எல்லையான புளிச்சங்காடு கைகாட்டியில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டது, போலீஸார் குவிக்கப்பட்டனர்.
   புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையான புளிச்சங்காடு- கைகாட்டி வழியாகவே தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டணம் உள்ளிட்ட டெல்டா  பகுதிகளுக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.    இந்நிலையில் காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க மறுக்கும் கந்நாடகா அரசைக் கண்டித்தும், அதைப் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும் விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஆவணத்தில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையான புளிச்சங்காடு கைகாட்டியிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதையடுத்து புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள் புளிச்சங்காடு கைகாட்டியில் நிறுத்தப்பட்டன.  நண்பகலுக்குப்பிறகு அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டு் திருப்பிச்சென்றன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஆலங்குடி காவல் துணைக்கண்காணிப்பாளர் ஏ.சி. செல்லபாண்டியன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுட்டனர்.



                                                                             
     

                                                                             
     

சுவாமியே சரணம் ஐய்யப்பா.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஐய்யப்பன் கோயிலில் கார்த்திகை மாத உத்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை(டிச.7) நடைபெற்ற திருவிளக்கு பூஜை.

ஆலங்குடி பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

படவிளக்கம்: புளிச்சங்காடு கைகாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
விவசாயிகள், தொழிலாளர்கள்.
 
ஆலங்குடி, டிச. 7:  தமிழகத்துக்கு காவிரிநீரை வழங்க மறுக்கும் கர்நாடக
அரசைக் கண்டித்தும், அதைப் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும்
விவசாயியிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   புளிச்சங்காடு-கைகாட்டி: இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு
விவசாயிகள் சங் மாவட்ட துணைச் செயலர் எல். வடிவேல், விவசாய தொழிலாளர்
சங்க மாவட்டத் தலைவலர் மா.மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
    விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ். ராஜசேகரன், விவசாய
தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் மு.மாதவன், கம்யூனிஸ்ட் கட்சியின்
ஒன்றியச் செயலர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கே. நல்லதம்பி, மார்க்சி்ஸ்ட்
கம்யூனிஸ்ட் கே. சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் ஆலங்குடி நகரச் செயலர்
ஆர். சொர்ணக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

 ரெகுநாதபுரம்:
  கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு
விவசாய சங்க மாவட்டத் தலைவர் சோமையா,மாவட்டச் செயலர் எஸ். பொன்னுச்சாமி
ஆகியோர் தலைமை வகித்தனர்.
    நிர்வாகிகள் டி. சத்தியமூர்த்தி, ஆர். கிருஷ்ணன், டி.அன்பழகன்,
வி.மணிவேல், ஆர்.முருகையா, எஸ். நாராயணன், எஸ். சேசுராஜ், உ. அரசப்பன்
ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.

வியாழன், 6 டிசம்பர், 2012

கீரமங்கலத்தல் விஏஓ மீது துப்பாக்கி சூடு



 



ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலத்தில் வியாழக்கிழமை நாய்களை பிடிக்க துப்பாக்கியால் சுட்டபோது கிராம நிர்வாக அலுவலர் மீது குண்டு பாய்ந்தது.
   கீரமங்கலம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை அழிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நாய்கள் சுட்டு கொல்லப்பட்டு அவைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு நாய்க்கு வைத்த குறி தடுமாறி அங்குள்ள கடையில் இருந்த ராஜேந்திரபுரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் கலைமணி மீது பய்ந்தது.  காயம் அடைந்த கலைமணி ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

                                                                             
       

                                                                             
       

போலீஸாரைக் கண்டித்து கொத்தமங்கலத்தில் சாலை மறியல்


ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் மாணவிகளுக்கு தொல்லை கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வுகளில் அதிகளவுலான மதிப்பெண்களைப் பெறுவதால் கொத்தமங்கலம் தவிர பிற பகுதிகளில் இருந்தும் பள்ளிக்கு சைக்கிளில் வந்து செல்கின்றனர்.  இந்நிலையில் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சிலர் பள்ளி மாணவிகளை  வழிமறித்து தொல்லை கொடுப்பதாக மாணவிகள்  மற்றும் பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் விவாதித்து, பிறகு கேலி செய்ததாக 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சித் தலைவர்  தி. பாண்டியன் கீரமங்கலம் காவல் நிலையத்தில் டிச.2-ல் புகார் அளித்தார்.  போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அத்தகைய செயல் தொடருவதாக மீண்டும் பள்ளிக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

போலீஸாரைக் கண்டித்து கொத்தமங்கலத்தில் சாலை மறியல்


ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் மாணவிகளுக்கு தொல்லை கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வுகளில் அதிகளவுலான மதிப்பெண்களைப் பெறுவதால் கொத்தமங்கலம் தவிர பிற பகுதிகளில் இருந்தும் பள்ளிக்கு சைக்கிளில் வந்து செல்கின்றனர்.  இந்நிலையில் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சிலர் பள்ளி மாணவிகளை  வழிமறித்து தொல்லை கொடுப்பதாக மாணவிகள்  மற்றும் பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் விவாதித்து, பிறகு கேலி செய்ததாக 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சித் தலைவர்  தி. பாண்டியன் கீரமங்கலம் காவல் நிலையத்தில் டிச.2-ல் புகார் அளித்தார்.  போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அத்தகைய செயல் தொடருவதாக மீண்டும் பள்ளிக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

புதன், 5 டிசம்பர், 2012

எங்கே போனார்கள் தமிழகத்தின் மத்திய அமைச்சர்கள்?



  தமிழகத்துக்கு இயற்கையும் கைவிரித்துள்ளதால் போதிய அளவு மழை இல்லை. மேலும், மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இவைகளின் பற்றாக்குறையால் தமிழக விவசாயிகள், வணிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டு, தற்கொலைக்கு ஆளாகியுள்ளனர்.  தண்ணீருக்காக அண்டை மாநிலத்தை நீதிமன்ற உத்தரவுகளோடும் தமிழகஅரசு அணுகியபோது, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீ்ரைக்கூட வழங்கமுடியாதென கூறும் அம்மாநில அரசுக்கே அங்குள்ள மத்திய அமைச்சர்களும் துணைநிற்கின்றனர். அதேநிலை மின்சாரத்துக்கும் ஏற்பட்டுள்ளது. ஆகையால், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்குள்ள மக்களை பாதுகாக்க பிறமாநிலங்களிடம் இருந்து தண்ணீரையும், மின்சாரத்தையும் பெற்றுத்தர தாங்கள் தமிழகமக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலும், விரைவில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையும் ஏற்பட்டுள்ளதால் பிரதமரிடம் உரிய முறையில் வலியுறுத்த வேண்டுமென்றார் ஆலங்குடி வணிகர் சங்கத் தலைவர் மெ.அ. தனபால்.

திங்கள், 3 டிசம்பர், 2012

தடைபடும் பேருந்தால் தடுமாறும் பயணிகள்



ஆலங்குடி பகுதியில் அரசு பேருந்து இயக்கம் தடைபடுவதால் மக்கள் தடுமாறுகின்றனர்.
  கடுக்காகாடு வழியாக ஆலங்குடி, கறம்பக்குடி இடையே அரசு நகர் பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்தை நம்பியே கடுக்காகாடு, வாணக்கன்காடு, கோட்டைக்காடு பகுதி மக்கள் உள்ளனர். நாளொன்றுக்கு 3 முறை இயக்கப்படும் இப்பேருந்து சில நேரங்களில் வருவதில்லை. உத்தரவாதமற்ற நிலையிலேயே இயக்கப்படுகிறது. மோசமான நிலையிலான பேருந்தாகவும் இருப்பதால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்றுவிடுகிறது. ஆகையால், இது குறித்து நடவடிக்கை எடுத்து ஆலங்குடி- கடுக்காகாடு- கறம்பக்குடி இடையே இயக்கப்படும் நகர் பேருந்தை தடையில்லாமல் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மழை வேண்டி முனிக்கு பூஜை, உத்தரவு கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி




புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் பருவமழை பொய்த்துப்போனதால் வாடிய பயிரைக் காப்பாற்ற மழை பெய்ய வேண்டி முனிசாமிக்கு கோழிகளை பலியிட்டு விவசாயிகள் பூஜை போட்டனர்.
   வடகாட்டில் நெடுங்குளம், பள்ளிகுளம், கூடப்பள்ளம், கோப்பன்குளம் உள்ளிட்ட குளத்தின் தண்ணீரைக்கொண்டு பள்ளத்திவயலில் ஏறத்தாழ 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 
அதன்படி, இந்த ஆண்டும் அவ்வப்போது பெய்த மழைக்கு உழுது நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அதைத்தொடர்ந்து மழை இல்லாததால் குளங்கள் வறண்டுவிட்டது. வயல் பகுதியானது பாலம், பாலமாக வெடித்துள்ளதுடன் நெல்பயிரும் காய்ந்து சருகாக மாறியுள்ளது. 
  இதையடுத்து பள்ளத்திவயலின் மேல் கரையில் உள்ள முனிக்கோவில் பூஜை போட்டால் மழை பெய்யும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கை. இதை ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வருகின்றனர். 
இதையடுத்து இந்த வருடம் இதுவரை போதிய அளவு மழை பெய்யாததை அடுத்து வயலில் சாகுபடி செய்த விவசாயிகள் கோழிகளை கோவிலுக்கு கொண்டுவந்து பலியிட்டு, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல், தொடர்ந்து பூஜை போடப்பட்டு வருகிறது. 

உத்தரவு கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி: 
    பூஜை போட்டுவிட்டு மழை வருமா, எப்போது மழை வரும் என்று அங்குள்ள ஆலமரத்தில் கோவில் பூசாரிகளுடன் விவசாயிகள் தரையல் அமர்ந்து நிமித்தம் கேட்டனர். நீண்ட நேரமாகியும் எந்த திசையிலும் பல்லி கத்தாததால் உத்தரவு கிடைக்கவில்லை என முடிவுக்கு வந்தனர். இதனால் தொடர்ந்து வறட்சியே நீடிக்குமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டது. இச்செய்தி பரவலாக வடகாடு பகுதியில் பேசப்படுகிறது.






                                                                               
        


தடைபடும் பேருந்து சேவைக்கு பணியாளர்களின் பற்றாக்குறையே காரணம்


கீரமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆலங்குடி வழியாக கீரமங்கலம், புதுக்கோட்டை இடையேயான பேருந்தை இயக்கை தொடக்கி வைத்தார். அப்போது, நவ.10-ம் தேதி வடகாடு வழியாக புளிச்சங்காடு-கைகாட்டி யிலிருந்து புதுக்கோட்டைக்கு தொடக்கி வைக்கப்பட்ட பேருந்து தொடக்க நாளில் இருந்து இயக்கப்படவில்லையே என பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன் மேலும் கூறியது.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை உள்ளது. புதிய ஊழியர்கள் நியமனத்துக்கும் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து வழித்தடத்திலும் தடையின்றி பேருந்துகள் இயக்கப்படும்.
     விழாவில் கீரமங்கலம்  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் துரை. தனசேகரன், பேரூராட்சித் தலைவர்கள் கீரமங்கலம் துரை. தனலெட்சுமி, ஆலங்குடி ஏ.டி.மனமோகன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, ஆலங்குடியில் நடைபெற்ற விழாவில் ஆலங்குடியிலிருந்து அறந்தாங்கிக்கு பேருந்தை தொடக்கி வைத்தார்.      


செல்பேசியால் சிதறும் கவனம்


சாலை விபத்துகளில் ஓட்டுநர்களின் கவனக் குறைவால் ஏற்படும் விபத்துகளுக்கு மூலமாக செல்போன் மற்றும் போதைப்பொருளாக இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டுமென அரசு எச்சரித்துள்ளது.
     பேருந்தில் உள்ள பயணிகளை சென்றடைய வேண்டிய இடத்தில் கொண்டு சேர்ப்பது ஓட்டுநரின் கடமையாகும். ஆனால், பொறுப்பமிக்க அவரோ, பேருந்து வேகமாக சென்றுகொண்டிருக்கும்போதே போதைபொருள் மற்றும் புகை பொருள்களை உபயோகிப்பதும், செல்போனில் பேசுவதும் தற்போது வாடிக்கையாகிவிட்டது.
        இதன்விளைவு பேருந்துக்குள் இருக்கும் பயணிகளுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துவதோடு அச்சத்தையும் ஏற்படுத்தி மரணத்துக்கு கொண்டுசேர்க்கிறது. புகை மற்றும் போதையை உண்டாக்கும் பாக்குகளை பயன்படுத்துவதால் பயணிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்படுகிறது. ஓட்டுநரை தட்டிக்கேட்க முடியாததால் பலர் மூக்கை மூடிக்கொள்கின்றனர்.
     இவைகளெல்லாம் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ள அப்பேருந்துக்குள்தான் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் நடத்துநரும் மீறுகிறார். அதுமட்டுமின்றி ஓட்டுநர் அருகேயுள்ள இஞ்சின், கண்ணாடி ஓரத்திலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அவர்களிடம் பேசிக்கொண்டேயும் பேருந்தை இயக்குகின்றனர். கிராமப் புறங்களில் சுமைஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநர்களில் பெரும்பாலானோருக்கு ஓட்டுநர் உரிமம் இருப்பதில்லை. இதுபோன்றவர்களை வாகனங்களை இயக்க அனுமதிப்பதால்தான் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. 
  இதை தடுப்பதற்காக சோதனை மேற்கொள்ளும் போலீஸார் உள்ளிட்ட போக்குவரத்து அலுவலர்கள் பேருந்துகளைத் தவிர பிற வாகங்களை நிறுத்தி தன் பாக்கெட்டை மட்டும் ரொக்கத்தால் நிரப்பிக்கொண்டு சோதனையை முடித்துக்கொள்கின்றனர். 
    ஒழுக்கமற்றோரிடம் பெறப்பட்ட சில நூறு ரூபாயானது அப்பாவிகளை பலிகிடாயாக்குறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எந்த வாகனத்தை இயக்கினாலும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். அதை மீறுவோருக்கு உரிய தண்டனையை அதற்கான அரசாணைப்படி நிறைவேற்ற வேண்டும். மீறுவோர் மீது விதிக்கப்படும் தண்டனை தவறுகளை கட்டுப்படுத்தும் விதமாக அமையவேண்டுமென்பதே  அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

வடகாட்டில் வாலிபால் போட்டி



  


வடகாட்டில் வாலிபால் போட்டி
 அன்புத்தங்கம் அணிக்கு முதல்பரிசு
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற வட்டார அளவிலான வாலிபால் போட்டியில் வடகாடு அன்புத்தங்கம் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது.
     வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகம் சார்பில் கைப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது. பகல் ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமான அணியினர் கலந்துகொண்டு விளையாடினர். 
நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசைப் பெற்ற வடகாடு அன்புத்தங்கம் அணிக்கு ரூ. 3001,  இரண்டாம் பரிசை பெற்ற வடகாடு கணேசன் நினைவு அணிக்கு ரூ. 2501, மூன்றாம் பரிசைப் பெற்ற கீரமங்கலம் அணிக்கு ரூ. 2001, நான்காம் பரிசைப் பெற்ற வடகாடு அண்ணா கைப்பந்து கழகம் அணிக்கு ரூ. 1501 மற்றும் ஐந்தாம் பரிசைப் பெற்ற பனங்குளம் அணிக்கு ரூ. 1001-னுடன் பரிசு பெற்ற அனைத்து அணிகளுக்கும் மறைந்த வாலிபால் பயிற்சியாளர் கணேசன் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது.
    வீரர்களிடையே தள்ளு, முள்ளு..
   பனங்குளம் அணிக்கும், வடகாடு கணேசன் நினைவு அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றபோது, நடுவரின் தீர்ப்புக்கு பனங்குளம் அணி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்துகொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் பனங்குளம் அணியைச் சேர்ந்த மாறன் என்பவரால் அடிக்கப்பட்ட பந்து அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த நடுவரை நோக்கி சென்றது. நடுவர் சுதாரித்துக்கொண்டு விலகிக்கொண்டதால் நடுவர்மீது பந்து படவில்லை. இது திட்டமிட்ட செயல் என, அங்கிருந்த வீரர்கள் பனங்குளம் அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு அணியினருக்கும் இடையே லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது.  இதனால் மற்றொரு ஆட்டத்தில் பனங்குளம் அணியினர் கலந்துகொள்ளாமல் வெளியேறியதால் மைதானத்தல் பரபரப்பு ஏற்பட்டது. 






                                                                               
        

                                                                               
        

தெருவில் மருத்துவமனைக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை






ஆலங்குடி, நவ. 28: ஆலங்குடியில் மருத்துவமனைக் கழிவுகளை தெருவில் கொட்டுவதை தடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ஆலங்குடியில் அரசமரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஸ்டேட் வங்கி எதிரே செல்லும் இணைப்பு சாலையின் சந்திப்பில் தனியார் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள், டியூப்கள், ஊசி, கழிவுகளுடன்கூடிய பஞ்சு உள்ளிட்ட கழிவுகளை தினமும் அவ்விடத்தில் கொட்டப்படுகிறது. தாழ்வான பகுதியான அவ்விடத்தில் தண்ணீர் தேங்குவதால் கொசுஅதிகமாக உற்பத்தியாவதுடன், கழிவுகள் அழுகி துரு நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அவ்விடத்தில் கழிவுகளை கொட்டுவது யாரெனக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






                                                                             
       

சர்க்கரை ஆலைகளின் எல்லை பிரச்னை




புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இரண்டு கரும்பு அரைவை ஆலையின் எல்லை பிரச்னையால் உரிய நேரத்தில் கரும்பை அறுவடை செய்யவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   ஆலங்குடி அருகேயுள்ள சம்மட்டிவிடுதி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் குரும்பூர்  ஈஐடி பாரி சர்க்கரை ஆலையின் மூலம் கரும்பு சாகுபடி மேற்கொள் ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழாண்டு அந்தப் பகுதியானது தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் சர்க்கரை ஆலையின் எல்லைக்குள்பட்ட பகுதி என்பதால் அப்பகுதியில் விளைவிக்கப்பட்டுள்ள கரும்பை எங்கள் ஆலைக்கே கொடுக்க வேண்டுமென அந்தஆலையின் அலுவலர்கள் விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
   இதுகுறித்து  தகவல் அறிந்த குரும்பூர் சர்க்கரை ஆலை அலுவலர்கள் விதைக்கரும்பு, உரம், மானியம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டிருப்பதால் எங்கள் ஆலைக்கே கொடுக்க வேண்டுமென அதே விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து அப்பகுதியில் விளைந்த கரும்புகளை அறுவடை செய்ய இரு ஆலைகளிலும் இருந்து அடுத்தடுத்து உத்தரவை அளித்துள்ளனர். அதன்படி, கரும்பை தொழிலாளர்கள் மூலம் அறுவடை பணி தொடங்கியது. கரும்பை ஏற்றிக்கொண்டு செல்ல இரு ஆலைகளில் இருந்தும் லாரியும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் குழப்பம் அடைந்த அப்பகுதி விவசாயிகள் எந்த லாரியிலும் ஏற்றாமல் பிரச்னையை முடித்தால் மட்டுமே ஏற்ற முடியுமென வலியுறுத்தி லாரியில் ஏற்ற மருத்தனர். இதனால் கரும்பு தோட்டத்தில் இரு ஆலை நிர்வாகத்தினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  எல்லை வேறுபட்டிருந்தாலும் விவசாயிகளின் விருப்பத்தின்படி குரும்பூர் ஆலை மூலம் பல ஏக்கரில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாகுபடியின் தொடக்கத்தில் தடுத்து, அந்த விவசாயிகளிடம் குருங்குளம் ஆலை நிர்வாகத்தின் ஆலோசனையில் சாகுபடி மேற்கொண்டிருக்கலாம். அதற்குமாறாக எங்கள் ஆலோசனையில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடைக்கு தயாரானபோது எல்லை பிரச்னை மூலம் சொந்தம் கொண்டாடுவது அர்த்தமற்றது என குரும்பூர் ஆலை நிர்வாகத்தின் சார்பி்ல் தெரிவிக்கப்படுகிறது.
  எல்லை எங்களுக்கானது அதில் சாகுபடி மேற்கொண்டது தவறு, ஆகையால் இங்கு விளைவிக்கப்பட்டுள்ள கரும்பை எங்கள் ஆலைக்கே அனுப்பி வைக்க வேண்டுமென குருங்களம் ஆலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

  இதுகுறித்து விவசாயி ஆர்.வீரப்பன் கூறியது.  கடந்தஆண்டு குரும்பூர் ஆலையின் மூலம் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தடுக்காத குருங்குளம் ஆலை நிர்வாகம் இப்போது தடுக்கின்றனர். இரு நிர்வாகத்தினரும் ஒரு முடிவெடுத்து அறுவடை செய்து வெயிலி்ல் காயும் கரும்பை ஏற்றிச்செல்ல வேண்டும். அண்மையில் இதேபகுதியிலிருந்து குரும்பூர் ஆலைக்கு ஏற்றிச்சென்ற கரும்பு லாரியை மறித்து குருங்களம் ஆலை நிர்வாகம் தகராறு செய்ததால் தற்போது லாரியில் ஏற்ற அச்சமாக இருக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். காலம் தவறியும், வெயிலில் கரும்பு காய்வதால் அதற்கான இழப்பையும் ஆலை நிர்வாகம் அளிக்க வேண்டும். என்றார்.


முத்துமாரியம்மன் கோயில் பாலாலயம்







புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பாலாலய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
            இக்கோயிலில் திருப்பணி தொடங்கவுள்ளதையொட்டி மூலரை வேறுடத்தில் தற்காலிகமாக அமைக்கும் பாலாலய நிகழ்ச்சியை ஆலங்குடி சொர்ண பைரவ சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இக்கோயிலுக்குள்ளப்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
  
                                                                             
       

மாங்காடு சிவன்கோவில் குளம் சீரமைப்பு



 


மத்தியஅரசின் திட்டத்தில் வேலை தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு விடங்கேஸ்வரர் சிவன் கோயில் குளத்தை மத்தியஅரசின் நிதியில் சீரமைப்பு பணி தொடங்கியது.
  மாங்காட்டில் பிரசித்திபெற்ற விடங்கேஸ்வரர் சிவன்கோவில் முன்பாக உள்ள குளத்தில் மழைகாலத்தில் தேங்கும் நீரையே ஆண்டுமுழுவதும் பயன்படுத்துவர்.  இந்நிலையில் பல ஆண்டுகளாக இக்குளம் சீரமைக்காததால் குளத்தின் ஆழம் குறைந்துவிட்டது. இதனால் கோடைகாலத்தில் தண்ணீருக்கு மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதுகுறித்து இப்பகுதி மக்கள், கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், மத்தியஅமைச்சருமான ப. சிதம்பரம் பரிந்துரையில், இப்கோ உரநிறுவனத்தின் மூலம் குளம் வெட்டும் பணி தொடங்கியது. இப்பணியை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புஷ்பராஜ் தொடக்கி வைத்தார். இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



                                                                             
       

                                                                             
       

காவல்நிலையம் செல்வோருக்குத்தான் கட்சியில் பொறுப்பு



   புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் டிச. 2-ம் தேதி நடைபெற்ற ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, கார்த்திக்சிதம்பரம் பேசியது.   ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஊராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுக்கு தலா 3 பேர் இளைஞராக நியமிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. 
 இவர்கள்மூலம் கட்சி மற்றும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற்று கூட்டத்துக்கு வரத்தவறியவர்களுக்கு பதிலாக புதியவர்களை சேர்க்க வேண்டும். கட்சியின் செயல்பாடுகளையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் கட்சியினர் அறிந்து பிறரிடம் எடுத்துக்கூற வேண்டும். துணிவுடன் காவல்நிலையம் செல்ல தகுதியுடையோருக்கு மட்டுமே கட்சியில் பொறுப்பு அளிக்க வேண்டும்.

மாங்காடு சிவன்கோவில் திருப்பணிக்கு நிதி


    
மாங்காடு சிவன்கோவில் திருப்பணிக்கு நிதி புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள மாங்காடு விடங்கேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.   மாங்காட்டில் பிரசித்தி பெற்ற விடங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் அனைத்து பகுதியிலும் பல லட்சம் ரூபாயைக் கொண்டு திருப்பணி மேற்கொள்ளப் பட்டுவருகிறது. மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  கோவில் சுற்றுச்சுவர், மடப்பள்ளி கட்டுவதற்கு ரூ. 9.6 லட்சம் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு அதில் கொடையாளர்களின் நிதியுதவியுன் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.                                                                                                 


கூடங்குளத்தில் அணுகுண்டு தயாரிக்க திட்டம்:



 
 


 கூடங்குளத்தில் அணுகுண்டு தயாரிக்க திட்டம்: 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்சாரத்தைக் காட்டிலும் அதிலிருந்து வெளியேறும் கழிவுகளைக் கொண்டு அணுகுண்டுகள் தயாரிக்கவே இத்திட்டத்தை நிறைவேற்ற மத்தியஅரசு முனைப்பு காட்டுகிறது என்றார் தமிழர் கழகத் தலைவர் ரா. பாவாணன்.
  ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாவீரர்தின பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது.
    குழந்தைகளுக்கு பொருளறிந்து உலகமொழிகளுக்கெல்லாம் தாயான தமிழில் பெயர் சூட்டவேண்டும். 
  தன்நாட்டில் ரஷ்யா மீண்டும் அணுமின் நிலையத்தை அமைக்காமல் இந்தியாவில் அதுவும் தமிழர்நிலத்தில் இத்தகைய திட்டம் அமைக்கவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழுபொறுப்பேற்க  மறுப்பதற்கும் காரணம் ஏற்கனவே அந்த நாட்டில் இத்திட்டத்தால் பலர் பலியானதும்,  9 லட்சத்து 85 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுமேயாகும். 
   அணுக்கழிவுகளால் மட்டுமே குண்டுகள் தயாரிக்கமுடியும் என்பதனாலே இத்திட்டத்தை இங்கு அமைக்க மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
    கூடங்குளம் அணுமின்நிலையம் அமைக்கப்பட்ட இடத்திலிருந்து மக்கள் 3 கி.மீ. வெளியேற வேண்டுமென்றதும், கடலில் அருகாமையில் இருந்த மீன்களெல்லாம் தற்போது 10 கி.மீ. தள்ளிப்போனதுமே அப்பகுதியினர் கூடங்குளம் திட்டத்தை எதிர்க்க காரணமாயிற்று .இதில் தனிநபரின் தூண்டுதல் ஏதும் கிடையாது. 
  தமிழன் மின்கழிவால் சாகவேண்டும் அல்லது 10 கி.மீ. சென்று மீன்பிடிக்க செல்லும்போது அங்கு இலங்கை ராணுவத்தினர் பிடித்து கொல்ல வேண்டுமென்பதற்காகவே இத்திட்டத்துக்கு காங்கிரஸ் அரசு முழு ஆதரவு அளிக்கிறது. 
ஒரே நாளில் தமிழர்களுக்கு காவிரி நீர் இல்லை என்கிறது கர்நாடகம், மின்சாரம் இல்லை என்கிறது மத்திய அரசு இதற்கு எதிராக காங்கிரஸ் ஏன் கருத்து கூறவில்லை. தமிழகமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கத் தொடங்கியுள்ளனர். மர்மக்காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் என்பது ஆண்டாண்டு காலமாக தமிழர் கடைபிடித்த மருத்துவமுறை. அதை தற்போது மருத்துவமனைகளில் வழங்குவது அரசின் காலம் தாழ்த்திய நடவடிக்கையாகும். 
   இலங்கை அரசுக்கு எதிரான ஐநாவின் தீர்மானத்தை ஆசிய கன்டத்தில் உள்ள நாடுகளெல்லாம் ஆதரித்ததால் இந்தியா ஆதரித்தேதவிர. இது முழுமனதான ஆதரவு இல்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசுவது ஆண்டுக்கொரு நாள். அதுவும்  கடந்த 2 ஆண்டாக இல்லை. பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன் என்றார்.
   கூட்டத்தில் ராமேஸ்வரம் செரூன்குமார், தமிழ்உணர்வாளர்கள் ரத்தினம், திருச்செல்வம், ரத்தினம், லோகநாதன்,  தமிழ்க்குமரன், காசிலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.

                                                           
                                                                             
       

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

வடகாட்டில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்துக்கு குருபூஜை



  


 புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் 2 -ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு அக். 7-ம் தேதி ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 ஆலங்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த வெங்கடாசலம் 7.10.2010 படுகொலை செய்யப்பட்டார். 
 இந்நிலையில் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடகாடு, பேப்பர்மில்ரோடு முக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. 
     இதில் மக்கள் பிரதிநிகள், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர், பல்வேறு கிராம மக்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். முன்னதாக வடகாடு கடைவீதியில் இருந்து அமைதியாக ஊர்வலம் வந்து நினைவிடத்தில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.  
                                                                               
        

                                                                               
        

சனி, 6 அக்டோபர், 2012

வடகாடு மாரியம்மன் கோவில் விரைவில் திருப்பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற வடகாடு அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் விரைவில் திருப்பணி தொடங்கவுள்ளது


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் தேரில் பவனி வரும் அம்மன்.

பத்திரிகையாளருக்கு பாராட்டு..


ஓடாத ஓட்டை வண்டி-க்கு





ஓடாத ஓட்டை வண்டி-க்கு 
வடகாடு வழியாக பட்டுக்கோட்டை-புதுக்கோட்டை இடையே செல்லும் இந்தப் அரசுப் பேருந்தானது ஆலங்குடியில் பழுதாகி பயணிகளை வெளியேற்றியது. இதேபோல் இவ்வழித்தடத்தில் சரியான தரமான பேருந்துகளை இயக்காததால் பழுதாகி நடுவழியிலேயே நிற்பதம், பயணிகள் நடப்பதும் வாடிக்கைதான்