புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மரம்தங்கசாமி. இவர் யாரும் செய்திடாத வகையில் தனது சொந்த நிலத்தில் நட்ட கன்றுகள் தற்போது வனமாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மரம் வளர்க்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பிரசாரம் மேற்கொண்டார். இவரது விழிப்புணர்வும் இம்மாவட்டத்தில் மரம் அதிகம் வளர்க்கப்படுவதற்கு ஒரு காரணமாகும். இப்பெருமைகளுக்கு சொந்தக்காரரான மரம்தங்கசாமி தற்போது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆறுதல் கூறுங்கள். 9786604177
வியாழன், 30 மே, 2013
ஞாயிறு, 19 மே, 2013
மாங்காடு சிவன் கோயில் குடமுழுக்கு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு அருகேயுள்ள மாங்காடு அருள்மிகு வர்த்தனாம்பிகை உடனுறை விடங்கேஸ்வரர் திருக்கோயில் ஜூன் 21-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 94438 96860
வெளியில் தமிழையும், வீட்டில் வேறு மொழியையும் பேசுபவர் தமிழரல்லர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் மே18 (இரவு)இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தோருக்கு நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆலங்குடி எம்எல்ஏ குப கிருஷ்ணன் பேசியது.
தமிழினம் 64 நாடுகளில் வாழும் தேசிய இனம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பேசப்பட்ட மொழிகலெல்லாம் இன்று அதற்கான சுவடே இல்லாமல் அழிந்துவிட்டது. ஆனால், பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு கொண்டுள்ள தமிழ்மொழியை எவராலும் அழிக்க முடியாது. அதை அழிக்க முற்படுவோர் வீழ்த்தப்படுவர். மொழி தலைத்தோங்க உலகத் தமிழரெல்லாம் ஒன்றுபட வேண்டும் இதுபோன்ற நிகளழ்ச்சிகளை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். வீட்டுக்குள் வேறு மொழியையும், வெளியில் தமிழ்மொழியையும் பேசுவோரெல்லாம் தமிழரல்லர் என்றார்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு அரசு தடைவிதித்துள்ள நிலையில், கொத்தமங்கலத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் ஆகையால் அவரது படம் வைக்க தடை செய்ப்பட்டது. ஒலி பெருக்கி பயன்படுத்தவும் கீரமங்கலம் போலீஸாரால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதையும் மீறி பிரபாகரன் மகன் படம், ஒலிபெருக்கியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
சனி, 11 மே, 2013
ஒரு வழியாக அம்மன் திருவிழா முடிவுக்கு வந்தது
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டில் பல ஆண்டுகளாக முத்துமாரியம்மன் கோவில் என்று அழைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் தென்கிழக்கில் வெட்டப்பட்ட புதிய குளத்தில் இருந்து தண்ணீர் ஊறியது. இதனால் நீரூற்று முத்துமாரியம்மன் கோவில் என்று பகுதிபேரால் அழைக்கப்பட்டது. அவரவர் அழைத்துக்கொள்வதோடு நிறுத்திகொண்டால்தான் பிரச்னையே இல்லையே. இதை ஒரு ஆயுதமாக வைத்துக்கொண்டு வேரு பிரச்னைகளோடு ஒப்பிட்டு கோஷ்ட்டிகளை உருவாக்கிக்கொண்டதால் பல்வேறு பிரச்னைகளும் நடந்தது. சிறு சிறு சிக்கல்களுக்கும் இடையே நல்லபடியாக திருவிழா நடைபெற்றது. மக்களும், போலீசும் நிம்மதியானார்கள்.
![]() |
மக்களோடு மகமாயி... |
திங்கள், 6 மே, 2013
இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மே 3-ம் தேதி நடைபெற்ற பத்திரிகை சுதந்திர தின விழாவில் கவிஞர் தங்கம்மூர்த்தி பேசியது.
பாமரனின் பள்ளிக்கூடம் தேநீர்கடையாகவும், அங்கு பணிபுரியும்
ஆசிரியர்களாக பத்திரிகைகள் திகழ்கின்றன. ஆகையால், மக்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கவும், கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்லவும், குறைகளை அச்சமின்றி வெளியிட வேண்டுமென்றால் பத்திரிகைகளின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குக்கிராமத்தில் முன்மாதிரியாவுள்ள மாங்குடி அரசுப் பள்ளியை வெளி உலகம் அறிந்ததும். அதேபோல, ஊழல்கள் மக்களுக்கு தெரிந்ததும் பத்திரிகை சுதந்திரத்தின் வெளிப்பாடாகும்.
இருப்பினும், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கிறது என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது பின்னடைவாகத்தான் உள்ளது.
இதுதொடர்பாக 179 நாடுகளைக்கொண்டு சர்வதேச அமைப்பின் கணக்கெடுப்புப்படி பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடத்தில் உள்ளது. இந்தியா 140 வது இடத்திலும், சீனா 174-வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் காஷ்மீர், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட தாக்குதல்களினால் இந்தியா தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
தனிமனித சிந்தனை நாட்டுக்கு முக்கியம், இருப்பினும் செய்தியாளர்கள் தான் கொண்டிருப்பதில் நல்லவற்றையே வெளிக்கொணர வேண்டும். இதுபோன்ற விழாக்களை மக்கள் விழாக்களாக மாற்ற வேண்டுமென்றார்.
விழாவுக்கு த.மு.எ.க.ச மாவட்டச் செயலர் ரமா.ராமநாதன் தலைமை வகித்தார்.
எழுத்தாளர் குயிலிமுனுசாமி, கவிஞர் பாலா, வட்டாட்சியர் கோவிந்தராஜ், பேரூராட்சித் தலைவர் ஏ.டி.மனமோகன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மக்கள் நீதிமன்ற பிரதிநிதி கே. செந்தில்ராஜா மற்றும் செய்தியாளர்கள் செய்தனர்.

வியாழன், 2 மே, 2013
மிரட்டும் வெயிலுக்கு தற்காப்பு
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த 2 பேர் சொந்த வீட்டுக்குள்ளே போனாங்க.. அங்கெ, குளிரூட்டும் கருவிகளை இயக்க மின்சாரம் இல்லை, மரத்தடிக்கு போனாங்க மரத்துல இலை இல்லை, குடத்தைப் பார்த்தாங்க தண்ணீர் இல்லை வேறு என்ன செய்ய முடியும்...
இதுமாதிரி சட்டையை கழற்றிவிட்டு இப்புடி சேர் கிடைச்சா இருக்க வேண்டியதுதான், பெஞ்ச் கிடைச்சா கொஞ்சம் சாய வேண்டியதுதான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)