வியாழன், 28 பிப்ரவரி, 2013
புதன், 27 பிப்ரவரி, 2013
மதுவை மக்கள் மறுத்தால் அரசும் மறுக்கும்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவு, மக்கள் வரிப்பணம் விரையமாவது, விதவை, வறுமை, மாணவர்கள் குடித்துவிட்டு பள்ளிக்கு செல்லும் அவலம் உள்ளிட்டவைகளுக்கு பிரதானமாக திகழுவது அரசே மதுபானக்கடைகளை நடத்துவதுதான். இதை மூடவேண்டும் என திரு. வைகோ, தமிழருவிமணியன், ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஏழை மக்களின் உணர்வை மதிக்கின்ற வகையிலான இத்தகைய போராட்டங்களுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மக்களே, போராட்டக்குழுவினர் யாராக இருந்தாலும் அவர்களது நோக்கம் தமிழர்களை குடியிலிருந்து காக்க வேண்டும் என்பதாகும். அதற்கு மாநில அரசு மறுக்கிறது என்பதை நாம் உணர்கிறோம் அப்படி என்றால் நாம் ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடுடன் குடிக்காமல் இருந்தால் கண்டிப்பாக மாநில அரசு தானாகவே மதுக்கடைகளை பூட்டிக்கொள்ளும். இதற்கு எந்த ஆர்ப்பாட்டமும் தேவையில்லை. அதை மறுத்துவிட்டு குடித்துவிட்டு அரசு மதுக்கடையை நடத்துவது நான் வாழும் தமிழ்பூமியான தமிழ்நாட்டுக்கு சாபக்கேடுன்னு வாய்கிழிய முச்சந்தியில் உட்கார்ந்து கொண்டு பேசுவதை தயவுசெய்து நிறுத்திவிட்டு மதுவை ஆதரிப்போர்களுக்கு நாம் பாடம்புகட்டுவோமே....
விபத்தின் பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் பிப். 24-ம் தேதி செ. ராஜா(32) விபத்தில் ரத்த வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். இது அப்பகுதியினருடைய நெஞ்சிலிருந்தும் நீங்காத துயரமாகும். இதற்கு மதுபானம், வடகாடு- கொத்தமங்கலம் இடையே தரமற்ற சாலை, இணைப்பு சாலை குறித்த விவரம் இன்மை, போக்குவரத்து விதிமீறலே காரணமாகும். இத்தகைய கொடுமைக்கும், ராஜாவின் பெற்றோர், உறவினர்களின் பாவத்துக்கும் தமிழக ஆட்சியாளரே பொறுப்பாவார் என்பது மக்களின் கருத்து.
திங்கள், 25 பிப்ரவரி, 2013
ஆசிய கண்டத்தில் புகழ்பேசும் புதுகை
குதிரை சிலைக்கு மாலை அணிவிக்க நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டிக்கும் வாகனங்கள்.
குளமங்கலம் அய்யனார் கோயில் முன்புள்ள குதிரை சிலைக்கு பழங்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கும் யானை.
ஆசிய கண்டம் அளவில் புதுக்கோட்டைமாவட்டம் புகழ்பேசும் அளவுக்கு இம்மாவட்டத்தில் சிற்பக்கலை சிறப்பு பெற்றுள்ளது. அதாவது, சித்தன்னவாசல் ஓவியம், சமணர்படுக்கை, அருங்காட்சியகம், கோட்டை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு சிறப்பாக திகழ்வது ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் ஆற்றங்கரையில் அய்யனார் கோயில் முன்புரம் 33 அடி உயரத்தில் தாவிக்குதிக்கும் விதமாக அமைக்கப்பட்ட குதிரை சிலை ஆகும். இச்சிலைக்கு மாசிமகத்தையொட்டி 25.02.2013- அன்று காகிதம், பிளாஸ்ட்டிக், பழங்களால் கோர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாலைகளை வாகனங்கள், மாட்டுவண்டிகள் மூலம் யானை, குதிரைகள் ஊர்வலத்தில் மேலதாளத்துடன் கொண்டுவந்து அணிவித்தனர். இங்கு ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் திரண்டதால் வில்லுனி ஆற்றங்கரையே திணறியது.
ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013
சனி, 23 பிப்ரவரி, 2013
இயற்கையோடு வாழ்வோர் யாசகம் கேட்கமாட்டார்.
முன்பெல்லாம் 12 மாதங்களில் 4 மாதங்கல் தொடர்ந்து மழைபெய்யும். விதைக்கும் பருவத்தில் தொடங்கி அறுவடைக்குள் அந்த பருவமழை காலம் முடிவடையும். ஆனால், தற்போதைய நிலை புயல் மையம் கொண்டால் மட்டுமே மழை என்ற நிலைக்கு மாறியுள்ளது. இதனால் மழை காலம் வறட்சியாகிறது. இதன்தாக்கம் தான் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிடம் இருந்து குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கன்னு நாம கேட்குறோம். அவங்களோ நாங்க குடிக்கணுமுன்னு கொடுக்க மறுக்குறாங்க. இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில் இதைவிட மோசமான நிலைக்கு நம் சந்ததி தள்ளப்படும். அப்படி என்றால் நாம் என்னசெய்வது? ஒரே வழி, அதிலும் எளிமையானது. அதுதான் மூதாதையர் பின்பற்றிய இயற்கையோடு இயைந்த வாழ்க்கை.... மரத்தை வெட்டுவதில்லை, மரங்களை நடுவோம், பிளாஸ்ட்டிகை ஒழிப்போம், விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை புறக்கணிப்போம், வாகனங்களை புறக்கணிப்போம், மின்விளக்குகளை தவிர்ப்போம், பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம், ஆடம்பரம் தவிர்ப்போம் இவற்றையெல்லாம் பின்பற்றுவது நமக்கு எளிமைதான் அதை செய்வோரை உலகமே பாராட்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள நெடுவாசல் வடக்கு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 21.02.2013-ல் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன் கூறினார். இதுதான் சாத்தியம்.
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
வறட்சியால் வாழ்வை இழக்கும் புதுகை விவசாயிகள்
விவசாயத்தையே முதுகெலும்பாக கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு,காவிரி பாசனத்துடன் பருவமழையைக் கொண்டும் விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தின் நீராதாரத்துக்கு பெரிதும் பயனளிக்கும் வடகிழக்கு பருவமழை பொய்த்தது, கர்நாடகம் கைவிரித்தது, தமிழகத்தின் மின்உற்பத்தி மிகவும் பின்னடைவானது. இதனால் நெல் உள்ளிட்ட அனைத்து விவசாயமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் வீதிக்கு வந்து போராடியதைத் தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களாக உள்ள தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த தமிழகஅரசு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளதோடு, சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது.
மேலும் உள்ள வறட்சி மாவட்டங்களை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான குழுஆய்வு மேற்கொண்டு அளிக்கும் ஆய்வு அறிக்கையின்படியே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழகஅரசு அறிவித்துள்ளது.
டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி ஆகிய வட்டங்களில் காவிரி, ஆழ்துளை கிணறு மூலம் 2.65 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தோடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் வளர்க்கப்படும் கால்நடைகளை அடிமாடுகளுக்கு விற்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் காரிப் பருவத்தில் மட்டும் சுமார் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஜனவரியில் கொள்முதல் தொடங்கியது. இந்நிலையில் இதே காலகட்டமான பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு மையத்திலும் சுமார் 700 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி மொத்த மையத்திலும் 44 ஆயிரத்து 100 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆண்டு அதே மாவட்டத்தில் 25 மையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதில் 2 மையங்களில் சுமார் 7 டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், தமிழகத்தில் மாடு விற்பனைக்கு புகழ்பெற்று விளங்கும் புதுக்கோட்டையில் காளை மாடுகளாக காட்சி அளித்த மாட்டுச் சந்தையானது வறட்சியின் தாக்கத்தால் முல்மேல் போரித்திய துணியாக எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் கன்றுக் குட்டிகளுடன்கூடிய பசுமாடுகளே விற்பனைக்கு வருகின்றன. அதிலும், வாரச்சந்தையான வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கெல்லாம் முடியும் சந்தையில் நண்பகல் வரை காத்திருந்தாலும் யாரும் எதிர்பார்த்த விலைக்கு கேட்காததால் மாடுகளை அடிமாடு விலைக்கு விற்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதோடு அறந்தாங்கி சந்தையிலும் விற்பனைக்காக ஓட்டிவரப்பட்ட மாடுகளை விற்பனை செய்யமுடியாமல் மீண்டும் வீட்டுக்கே ஓட்டிச் செல்கின்றனர்.
இந்நிலையைக் கண்டித்து வடகாடு அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் கால்நடைகளை பாதுகாக்க கால்நடைகளுக்கு அரசு மானியவிலையில் தீவனம் வழங்கவும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி கால்நடைகளுடன் அண்மையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆகையால் வறட்சியன் தாக்கத்தால் நெல்கொள்முதல் குறைவு, கால்நடைகளை அடிமாடுகளுக்கு விற்பது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரேஷன்கடைகளை கூட்டம் அலைமோதுவது இவைகளையெல்லாம் வறட்சிக்கான ஒரு சான்றாக கொண்டு விரைவில் வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் கூறியது. நிலத்தை நம்பி மாற்றுவழி தெரியாமல் திகைத்து நிற்கும் விவசாயிகளையும், விவசாயைத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு டெல்டா மாவட்டங்களுக்கு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் புதுக்கோட்டை மாவட்ட டெல்டா பகுதிக்கும், அதோடு, 1989-ல் ஒருங்கிணைந்த டெல்டாபகுதியாக அறிவிக்கப்பட்ட ஆலங்குடி பகுதிக்கும் அனுமதித்து நிவாரணம் வழங்க வேண்டும். இக்கோரிக்கை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் போராட்டத்தின் வாயிலாக கொண்டு செல்லப்படும் என்றார்.
நாங்க பொறுப்பல்ல... பிறரை சொல்லி தப்பிக்கும் அரசியல் வாதிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் (22.02.2013 )இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டையில் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியைக் குறைசொல்லி தமிழகத்தை ஆளும் அதிமுகவினர். அதே மாவட்டம் ஆலங்குடியில் மாநிலத்தை ஆளும் அதிமுகவை குறை சொல்லி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியினர். இருவர்களது கோரிக்கையும் தமிழகத்தில் மின்தடை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளாகும். இருவருமே மாறி மாறி குறை சொல்லிக்கொண்டால் யார்தான் இந்தப் பிரச்னைகளை தீர்ப்பது.
இத்தகைய ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக நாம் உணர்வது இப்பிரச்னையை இருவராலும் தீர்க்கமுடியாது என்பதுதானே.. அப்படி என்றால் யார்தான் தீர்ப்பது. மக்களே உணருங்கள்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013
செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
செவ்வாய், 5 பிப்ரவரி, 2013
தயாராகும் மாவீரன் வரலாற்றுச்சுவடு..
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் அ. வெங்கடாசலம். இத்தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராவும் இருந்த இவர் 7.10.2011-ல் படுகொலை செய்யப்பட்டார். இவரது நினைவுகளை பதிவு செய்யும்விதமாக முக்கிய புகைப்படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. ஆகையால், மாவீரன் அ. வெங்கடாசலத்தைப் பற்றிய தொகுப்புகள் இருந்தால் இந்த வலைதளத்தை அவசியம் தொடர்புகொள்ளவும்.
truespy@rediffmail.com
திங்கள், 4 பிப்ரவரி, 2013
மாவீரன் நினைவாக வடகாட்டில் பிப். 9-ல் கபாடிபோட்டி
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் 09.02.2013 தேதி பகல், இரவாக கபாடி போட்டி நடைபெறுகிறது. வடகாடு ஏ.வி. பேரவை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள மைதானத்தில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவாக கபடி போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 4 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 3 ஆயிரம் மற்றும் நான்காம் பிரசு ரூ. 2 ஆயிரம் மற்றும் பதக்கம், நினைவு பரிசும் வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகள் பிப்ரவரி 9-ம் தேதி காலை 11 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் தகவலுக்கு 97510 26224, 97864 99841, 86084 06766 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
சனி, 2 பிப்ரவரி, 2013
முத்துக்குமரனின் கோரிக்கைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் நிறைவேறுமோ?
புதுக்கோட்டை, மச்சுவாடியில் உள்ள தொழுநோயாளிகளோடு 2012-ல் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முன்னாள் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பி. முத்துக்குமரனிடம் காலணிகளை அரசே வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டுமென எம்எல்ஏவிடம் அங்குள்ள மக்கள் கண்ணீரோடு கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கைகள் 2013-ல் நிறைவேறியது. ஆனால், கோரிக்கையை முதலமைச்சரிடம் சொன்னவரைக் காணவில்லையே.....
என்கிறார்கள் நோயாளிகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)