ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

திருடனை பிடிக்க பொறியாக நிறுத்தப்பட்ட சைக்கிளும் மாயம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் சைக்கிள் அடிக்கட திருடப்பட்டு வந்துள்ளது. இத்தகைய சம்பவம் தொடர்பாக யாரும் கைதாகவில்லை. இதுதொடர்பாக திருடர்களைப் பிடிக்க கீரமங்கலம் பகுதியில் இரவுக் காவலராக பணிபுரியும் செல்வநாயகம், இரவு நேரங்களில் கண்விழித்து சைக்கிளில் உலாவந்தபோதும் யாரும் சிக்கவில்லை.
  இதையடுத்து கீரமங்கலம் கடைவீதியில் அதாவது அடிக்கடி சைக்கிள் திருடப்படும் இடத்தில் ஒரு நகைக்கடையின் எதிரே அந்த கடை கேமரா முன்பாக சைக்கிளை நிறுத்திவிட்டு அதன்அருகே மறைந்திருந்துள்ளார்.
     கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்தபோது சைக்கிள் அருகே ஒருவர்கூட வரவில்லை. லேசாக இவருக்கு தூக்கம் அசத்தியுள்ளது. விழித்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் மாயமானது. சுற்றிலும் தேடியும் கிடைக்கவில்லை.
   இதையடுத்து அந்தக்கடையின் கேமராவில் பதிந்துள்ள காட்சிகளைப்  பார்த்தபோது சுமார் 4. 30 மணிக்கு தலையில் துணியால் முக்காடிட்ட நபர் ஒருவர் திருடியது தெரியவந்துள்ளது.  திருடனை பிடிக்க பொறியாக வைக்கப்பட்ட தன்னுடைய சைக்கிளும் திருடப்பட்டது குறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் செல்வநாயகம்.

இந்திய கடற்படை கப்பல் விபத்தை முன்கூட்டியே கணித்த தமிழ் பஞ்சாங்கம்

லாவண்யா பதிப்பகத்தின் சார்பில் 2013-14-ம் ஆண்டிற்கான விஜய வருடத்தில் பஞ்சாங்கம் ஆற்காடு கா.வே. சீதாராமய்யரால் கணித்து எழுதப்பட்டுள்ளது.
 இந்த தமிழ்ஆண்டு பஞ்சாங்கத்தில் ஆடி 29-ம் தேதி (14.08.2013)புதன்கிழமை அன்று பகல் நேரத்தில் கடலில் சரக்கு கப்பல்களில் சில பிரச்னை ஏற்பட்டு திடீர் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
   இவ்வாறு குறிப்பிட்டுள்ளபடி அதே நாளில் மும்பை கடற்படைத்தளத்தில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.
   அதுமட்டுமின்றி வடநாடு பகுதியில் உள்ள காசி, கயா, அயோத்தி, போன்ற பகுதிகளில் யாத்ரீகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதிருப்பது குறிப்பிடத்தக்கது.
   முன்னொரு காலத்தில் அத்வாசிய பொருள்களில் ஒன்றாக இருந்தது. பஞ்சாங்கம். முன்னோர்கள் எதை செய்தாலும் பஞ்சாங்கத்தை பின்பற்றியே செய்தனர்.  நாளடைவில் அறிவியல் தொழில்நுட்பங்களை பின்பற்றத் தொடங்கியதால் இவற்றின் பயன்பாடு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பஞ்சாங்கத்தின் கணிப்பு மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாங்கம் பார்ப்போர் கூறுகின்றனர். இருப்பினும் இந்தக்குறிப்பு வேறு ஏதேனும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

மாணவர்களின் கேள்விகளுக்கு நீதிபதி பதில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஶ்ரீசுபபாரதி பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை(20.08.2013)மாலை 4 மணிக்கு வளாகத்தில் ஆலங்குடி நீதிமன்றம் சார்பில் சட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சட்டம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆலங்குடி நீதிபதி கிருபாகரன்மதுரம் பதிலளிக்கிறார். இந்த நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளது. இதுநீதிபதியின் யோசனையென ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். தொடர்புக்கு: 98652 77950 கே. செந்தில்ராஜா ஒருங்கிணைப்பாளர்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

விலையில்லா திட்டத்தை முடக்கும் செயலே நேரடிமானிடத்திட்டம்




ஆலங்குடி, ஆக. 10:
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விலையில்லா திட்டத்தை முடக்கும் நடநடிக்கையே மத்தியஅரசின் நேரடிமானியத்திட்டமென்றார் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன்.
   ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி மேலநெம்மக் கோட்டையில் புதிய பகுதி நேரஅங்காடியை திறந்து வைத்து மேலும் அவர் பேசியது
   நேரடி மானியத்திட்டத்தின் மூலம் கொடுக்கும் பணம் கிலோ அரிசிக்கு ரூ. 3 வீதம் 20 கிலோவுக்கும் ரூ. 60- ஐ மத்திய அரசு கொடுத்தால் அதைக்கொண்டு அரிசி வாங்கிவிடமுடியுமா?. இதேநிலைதான் இதர உணவுப்பொருள், எரிபொருளுக்குமாகும். இதெல்லாம் பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழகத்தில் செல்படுத்தப்படும் விலையில்லா திட்டங்களை முடக்கவே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஏழைகளின் வறுமை ஒழியாது.   மேலும்,  இந்திய வீரர்கள் பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட்டது,  டாலர் மதிப்பு வீழ்ச்சி, விவசாயிகள் பாதிப்பில் அக்கறைகொள்ளாதது இவைகளெல்லாம் மத்திய அரசின் நிர்வாகத்திறமையின்மையின் அடையாளமாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.
       401 அட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரேஷன் கடை வாரம் தோறும் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இருநாள்கள் முழுநேரமும் செயல்படுமென தெரிவிக்கப்பட்டது.
  முன்னதாக மேலக்கோட்டையில் பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் துரைதனசேகரன், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ஏ.டி.மனமோகன், வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தலைவர் எம். ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆர். பரமசிவம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கத் தலைவர் கே.எஸ். சரவணன், மாவட்ட பால்வள சங்கத்தின் துணைத் தலைவர் எம்.எஸ். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.