புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள மாங்காட்டில் பல நூறு ஆண்டுகளைக் கடந்த விடங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் ஆடி மாதம் முதல் தை மாதம் வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரான சிவலிங்கத்தின் மீது விழுந்து பிரதிபலிப்பதால் இக்கோவில் சிவபெருமானை சூரியன் பூஜித்த தலமாக விளங்குகிறது.
மேலும், இக்கோவிலின் சிறப்புகளை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதை எனும் பகுதியில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்துக்கு முன்தோன்றிய இக்கோவிலில் கருவரை, மஹாமண்டபம், அம்மன், காலபைரவர், கணபதி, முருகன், நவகிரகம், துர்க்கை, சண்டிகேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவாக சவாமி என கோவிலின் அனைத்து பகுதிகளும் மக்களின் நன்கொடை மூலம் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்படட தீர்த்தங்களை குடங்களில் நிரப்பி ஜூன் 16-ம் தேதி காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் பிரபாகர் தலைமையிலான சிவாச்சாரியார்களால் தொடங்கின.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்யப்பட்டது. 5- ஆம் கால பூஜை முடிவுற்றதும் செண்டை மேளஇசையில் யானை, குதிரைகள் முன்னே செல்ல, புனிதநீர்க்குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை சுற்றிவந்து கோபுரங்களை அடைந்தனர். பின்னர், தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை சொல்லிக்கொண்டே இருந்தனர். அப்போது, பல்வேறு திசைகளில் இருந்து கருடன்கள் வந்து வானில் வட்டமிட்டன. இதையடுத்து பக்தர்களின் கரஒலியுடன் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டதுடன், தீர்த்தும் தெளிக்கப்பட்டது.
கூட்டத்தை ஒழுங்குபடுத்திய மாணவர்கள்:
எல்.என்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கோவில் அருகே 3 இடங்களில் அன்னதானம் அளிக்கப்பட்டது. வடகாடு காவல் நிலைய போலீசார் மற்றும் ஆலங்குடி தீயணைப்பு பிரிவு போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பல்வறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், பொதுமக்கள் செய்தனர். பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கிராம மக்கள் சார்பில் அனைவரையும் வரவேற்றனர்.