செவ்வாய், 30 ஏப்ரல், 2013

பத்திரிகை சுதந்திர தினம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மே 3-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆலங்குடி செய்தியாளர்கள் சார்பில் பத்திரிகை சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது.
  இதில் செய்தியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர். தவறாது கலந்துகொள்ளவும்.  9976368591
 

சனி, 27 ஏப்ரல், 2013

விலையில்லா பொருள்களை வாங்க மறுத்த மக்கள்

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் கோவிலூர் மற்றும் எல்என்புரம்(அணவயல்) ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் சில பகுதியினருக்கு 26.03.2013 அன்று அரசின் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவைகளை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குப கிருஷ்ணன் தலைமையில் வழங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வழங்க வேண்டுமென விடுபட்டோர் வலியுறுத்தியதால் இரண்டு இடங்களிலும் விழா ரத்து செய்யப்பட்டது.
 இதன் பின்னணி, கடந்த ஆட்சியில் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய உருளை பெரும்பாலான கிராமங்களில் வழங்கவில்லை. அதைப்போலவே தற்போதும் சிலருக்கு கொடுத்துவிட்டு எல்லோருக்கும் வழங்கியாச்சுன்னு அறிவிச்சுடுவாங்கன்னு மக்கள் அச்சப்படுறாங்க. இதுவும் நியாயம்தானே... ஓட்டு கேட்கும்போது மட்டும் கட்சிக்காரங்க கையில இருந்த பட்டியல் இப்ப எங்கபோச்சு... இப்ப மட்டும் எதா இருந்தாலும் அதிகாரிகளிடம் கேளுங்கண்ணு சொல்லுவது நியாயமா?  என அந்தவிழாவில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் வழிமறித்து கேட்டாங்க..... இதுக்கு யார் பதில் சொல்றது..........
 எல்லோரும் ஓடியே போய்ட்டாங்க..