ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

திருடனை பிடிக்க பொறியாக நிறுத்தப்பட்ட சைக்கிளும் மாயம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் சைக்கிள் அடிக்கட திருடப்பட்டு வந்துள்ளது. இத்தகைய சம்பவம் தொடர்பாக யாரும் கைதாகவில்லை. இதுதொடர்பாக திருடர்களைப் பிடிக்க கீரமங்கலம் பகுதியில் இரவுக் காவலராக பணிபுரியும் செல்வநாயகம், இரவு நேரங்களில் கண்விழித்து சைக்கிளில் உலாவந்தபோதும் யாரும் சிக்கவில்லை.
  இதையடுத்து கீரமங்கலம் கடைவீதியில் அதாவது அடிக்கடி சைக்கிள் திருடப்படும் இடத்தில் ஒரு நகைக்கடையின் எதிரே அந்த கடை கேமரா முன்பாக சைக்கிளை நிறுத்திவிட்டு அதன்அருகே மறைந்திருந்துள்ளார்.
     கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்தபோது சைக்கிள் அருகே ஒருவர்கூட வரவில்லை. லேசாக இவருக்கு தூக்கம் அசத்தியுள்ளது. விழித்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் மாயமானது. சுற்றிலும் தேடியும் கிடைக்கவில்லை.
   இதையடுத்து அந்தக்கடையின் கேமராவில் பதிந்துள்ள காட்சிகளைப்  பார்த்தபோது சுமார் 4. 30 மணிக்கு தலையில் துணியால் முக்காடிட்ட நபர் ஒருவர் திருடியது தெரியவந்துள்ளது.  திருடனை பிடிக்க பொறியாக வைக்கப்பட்ட தன்னுடைய சைக்கிளும் திருடப்பட்டது குறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் செல்வநாயகம்.

இந்திய கடற்படை கப்பல் விபத்தை முன்கூட்டியே கணித்த தமிழ் பஞ்சாங்கம்

லாவண்யா பதிப்பகத்தின் சார்பில் 2013-14-ம் ஆண்டிற்கான விஜய வருடத்தில் பஞ்சாங்கம் ஆற்காடு கா.வே. சீதாராமய்யரால் கணித்து எழுதப்பட்டுள்ளது.
 இந்த தமிழ்ஆண்டு பஞ்சாங்கத்தில் ஆடி 29-ம் தேதி (14.08.2013)புதன்கிழமை அன்று பகல் நேரத்தில் கடலில் சரக்கு கப்பல்களில் சில பிரச்னை ஏற்பட்டு திடீர் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
   இவ்வாறு குறிப்பிட்டுள்ளபடி அதே நாளில் மும்பை கடற்படைத்தளத்தில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.
   அதுமட்டுமின்றி வடநாடு பகுதியில் உள்ள காசி, கயா, அயோத்தி, போன்ற பகுதிகளில் யாத்ரீகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதிருப்பது குறிப்பிடத்தக்கது.
   முன்னொரு காலத்தில் அத்வாசிய பொருள்களில் ஒன்றாக இருந்தது. பஞ்சாங்கம். முன்னோர்கள் எதை செய்தாலும் பஞ்சாங்கத்தை பின்பற்றியே செய்தனர்.  நாளடைவில் அறிவியல் தொழில்நுட்பங்களை பின்பற்றத் தொடங்கியதால் இவற்றின் பயன்பாடு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பஞ்சாங்கத்தின் கணிப்பு மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாங்கம் பார்ப்போர் கூறுகின்றனர். இருப்பினும் இந்தக்குறிப்பு வேறு ஏதேனும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

மாணவர்களின் கேள்விகளுக்கு நீதிபதி பதில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஶ்ரீசுபபாரதி பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை(20.08.2013)மாலை 4 மணிக்கு வளாகத்தில் ஆலங்குடி நீதிமன்றம் சார்பில் சட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சட்டம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆலங்குடி நீதிபதி கிருபாகரன்மதுரம் பதிலளிக்கிறார். இந்த நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளது. இதுநீதிபதியின் யோசனையென ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். தொடர்புக்கு: 98652 77950 கே. செந்தில்ராஜா ஒருங்கிணைப்பாளர்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

விலையில்லா திட்டத்தை முடக்கும் செயலே நேரடிமானிடத்திட்டம்




ஆலங்குடி, ஆக. 10:
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விலையில்லா திட்டத்தை முடக்கும் நடநடிக்கையே மத்தியஅரசின் நேரடிமானியத்திட்டமென்றார் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன்.
   ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி மேலநெம்மக் கோட்டையில் புதிய பகுதி நேரஅங்காடியை திறந்து வைத்து மேலும் அவர் பேசியது
   நேரடி மானியத்திட்டத்தின் மூலம் கொடுக்கும் பணம் கிலோ அரிசிக்கு ரூ. 3 வீதம் 20 கிலோவுக்கும் ரூ. 60- ஐ மத்திய அரசு கொடுத்தால் அதைக்கொண்டு அரிசி வாங்கிவிடமுடியுமா?. இதேநிலைதான் இதர உணவுப்பொருள், எரிபொருளுக்குமாகும். இதெல்லாம் பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழகத்தில் செல்படுத்தப்படும் விலையில்லா திட்டங்களை முடக்கவே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஏழைகளின் வறுமை ஒழியாது.   மேலும்,  இந்திய வீரர்கள் பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட்டது,  டாலர் மதிப்பு வீழ்ச்சி, விவசாயிகள் பாதிப்பில் அக்கறைகொள்ளாதது இவைகளெல்லாம் மத்திய அரசின் நிர்வாகத்திறமையின்மையின் அடையாளமாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.
       401 அட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரேஷன் கடை வாரம் தோறும் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இருநாள்கள் முழுநேரமும் செயல்படுமென தெரிவிக்கப்பட்டது.
  முன்னதாக மேலக்கோட்டையில் பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் துரைதனசேகரன், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ஏ.டி.மனமோகன், வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தலைவர் எம். ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆர். பரமசிவம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கத் தலைவர் கே.எஸ். சரவணன், மாவட்ட பால்வள சங்கத்தின் துணைத் தலைவர் எம்.எஸ். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   
                                                                             
       

வெள்ளி, 5 ஜூலை, 2013

ஈழத்தமிழர்களை பாராட்ட இசைந்துள்ளார் அதிமுக எம்எல்ஏ

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் ஜூலை 6-ம் தேதி ஒரு விழா நடைபெறுகிறது. அந்த முகாம் மக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற தமிழகத்தில் உள்ள முகாம் மாணவர்கள் பாராட்டப்பட உள்ளனர். இவர்களை ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன் (அதிமுக) பாராட்டுகிறார். மாணவர்கள் எந்த வழிக் கல்வியில் பயின்றார்கள் என்பது தெரியாது. அந்த கட்சியில் இவர் ஒருவர்தான் தமிழ் குறித்து அதிகம் பேசுவார்

சனி, 22 ஜூன், 2013

மாங்காடு சிவன்கோவில் கும்பாபிஷேம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள மாங்காட்டில் பல நூறு ஆண்டுகளைக் கடந்த விடங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் ஆடி மாதம் முதல் தை மாதம் வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரான சிவலிங்கத்தின் மீது விழுந்து பிரதிபலிப்பதால் இக்கோவில் சிவபெருமானை சூரியன் பூஜித்த தலமாக விளங்குகிறது.
   மேலும், இக்கோவிலின் சிறப்புகளை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதை எனும் பகுதியில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்துக்கு முன்தோன்றிய இக்கோவிலில் கருவரை, மஹாமண்டபம், அம்மன், காலபைரவர், கணபதி, முருகன், நவகிரகம், துர்க்கை, சண்டிகேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவாக சவாமி என கோவிலின் அனைத்து பகுதிகளும் மக்களின் நன்கொடை மூலம் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்படட தீர்த்தங்களை குடங்களில் நிரப்பி ஜூன் 16-ம் தேதி காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் பிரபாகர் தலைமையிலான  சிவாச்சாரியார்களால் தொடங்கின.
  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்யப்பட்டது.  5- ஆம் கால பூஜை முடிவுற்றதும் செண்டை மேளஇசையில் யானை, குதிரைகள் முன்னே செல்ல, புனிதநீர்க்குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை சுற்றிவந்து கோபுரங்களை அடைந்தனர். பின்னர், தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை சொல்லிக்கொண்டே இருந்தனர். அப்போது, பல்வேறு திசைகளில் இருந்து கருடன்கள் வந்து வானில் வட்டமிட்டன. இதையடுத்து பக்தர்களின் கரஒலியுடன் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டதுடன், தீர்த்தும் தெளிக்கப்பட்டது.
கூட்டத்தை ஒழுங்குபடுத்திய மாணவர்கள்:
 எல்.என்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கோவில் அருகே 3 இடங்களில் அன்னதானம் அளிக்கப்பட்டது. வடகாடு காவல் நிலைய போலீசார் மற்றும் ஆலங்குடி தீயணைப்பு பிரிவு போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பல்வறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்,   பொதுமக்கள் செய்தனர். பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கிராம மக்கள் சார்பில் அனைவரையும் வரவேற்றனர்.


வெள்ளி, 21 ஜூன், 2013

சொன்னதுக்கு என்ன மரியாதை: ஆலங்குடி எம்எல்ஏ ஆவேசம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வாண்டாகோட்டை அருகே பால் வண்டியும், தனியார்பேருந்தும்( பிஎல்.ஏ) ஜூன் 19-ம் தேதி  மோதிக்கொண்டதில் கைக்குறிச்சி ஊராட்சி விஜயரகுநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த 7 மாணவர்கள், பால் வண்டி ஓட்டுநர் உள்பட 8 பேர் சம்வஇடத்திலேயே பலியாயினர். இவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நபருக்கு தலா ரூ. 1 லட்சத்தை ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன், ஆட்சியர் செ. மனோகரன் உள்ளிட்டோர் ஜூன் 20 -ம் தேதி வழங்கினர்.
 அதன்பிறகு ஆட்சியரகத்தில் மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் விபத்தில்லாமல் பேருந்தை இயக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அதிக பட்சம் 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லவேண்டுமென்ற அரசாணையை பின்பற்ற வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
      கூட்டத்தை முடித்துவிட்டு ஆலங்குடி சட்டப்பேரவை  உறுப்பனர் கு.ப. கிருஷ்ணன் காரில் திருச்சிக்கு சென்றுகொண்டிருந்தார். மாத்தூர் அருகே சென்றபோது எதிரே திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கி அதிவிரைவாக வந்த தனியார் பேருந்து (என். எல்.எல்) எம்.எல்.ஏ. வின் காரை இடித்து தள்ளுவதுபோல மின்னல்வேகத்தில் காரை நோக்கி வந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட காரின் ஓட்டுநர் கணம் நேரத்தில் சாலையை விட்டு காரை இறக்கினார். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
     இதைத்தொடர்ந்து அங்கிருந்தபடியே மாவட்ட ஆட்சியரை செல்போனில் தொடர்புகொண்ட எம்எல்ஏ கு. ப. கிருஷ்ணன், அரசின் விதிமுறைகளை மீறி, நாம் கூட்டத்தின் வாயிலாக சொல்லியும் மதிக்காத தனியார் பேருந்து (என்என்எல்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதன்படி புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலரால் அந்த பேருந்து பறிமுதல் செய்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, ஓட்டிநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.