செவ்வாய், 30 ஏப்ரல், 2013

பத்திரிகை சுதந்திர தினம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மே 3-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆலங்குடி செய்தியாளர்கள் சார்பில் பத்திரிகை சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது.
  இதில் செய்தியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர். தவறாது கலந்துகொள்ளவும்.  9976368591
 

சனி, 27 ஏப்ரல், 2013

விலையில்லா பொருள்களை வாங்க மறுத்த மக்கள்

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் கோவிலூர் மற்றும் எல்என்புரம்(அணவயல்) ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் சில பகுதியினருக்கு 26.03.2013 அன்று அரசின் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவைகளை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குப கிருஷ்ணன் தலைமையில் வழங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வழங்க வேண்டுமென விடுபட்டோர் வலியுறுத்தியதால் இரண்டு இடங்களிலும் விழா ரத்து செய்யப்பட்டது.
 இதன் பின்னணி, கடந்த ஆட்சியில் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய உருளை பெரும்பாலான கிராமங்களில் வழங்கவில்லை. அதைப்போலவே தற்போதும் சிலருக்கு கொடுத்துவிட்டு எல்லோருக்கும் வழங்கியாச்சுன்னு அறிவிச்சுடுவாங்கன்னு மக்கள் அச்சப்படுறாங்க. இதுவும் நியாயம்தானே... ஓட்டு கேட்கும்போது மட்டும் கட்சிக்காரங்க கையில இருந்த பட்டியல் இப்ப எங்கபோச்சு... இப்ப மட்டும் எதா இருந்தாலும் அதிகாரிகளிடம் கேளுங்கண்ணு சொல்லுவது நியாயமா?  என அந்தவிழாவில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் வழிமறித்து கேட்டாங்க..... இதுக்கு யார் பதில் சொல்றது..........
 எல்லோரும் ஓடியே போய்ட்டாங்க..






வெள்ளி, 22 மார்ச், 2013

பிளாஸ்ட்டிக் சூழலை கெடுக்கும்



  புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் சூழலைக்காக்க தான் நடத்தும் தேநீர் கடையில் பிளாஸ்ட்டிக் பையில் தேநீர் கொடுக்கமுடியாதென துண்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் அக்கடையின் உரிமையாளர். அனைவரும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளலாமே...      

மாடுகளை தெருவுக்கு ஓட்டிவந்து கூவி, கூவி விற்கும் விவசாயிகள்


குறைந்தளவான பருவ மழை, தொடர்மின்தடை,
இவற்றல் நெல், கடலை உள்ளிட்ட பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் உணவுப்பற்றாக்குறையோடு வைக்கோல் தட்டுப்பாடு, தீவனங்கள் கடும் விலை உயர்வினால் கால்நடை வளர்ப்பும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
   சம்பா சாகுபடியில் அறுவடை செய்யப்பட்டு வயலில் விடப்பட்ட வைக்கோலையும் அதிக விலை கொடுத்து கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
   இதன்தாக்கம் சந்தைகளில் மாடுகளை குறைந்த விலைக்கு அடிமாடுக்கே விற்பனை செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
   இதனால், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து லாரிகளில் ஏற்றிவரப்பட்ட பலவிதான மாடுகளை கிராம பகுதிகளுக்குள் கையில் பிடித்துக் கொண்டு மாடு வேண்டுமா என விவசாயிகள் தாங்கள் வளர்த்த மாடுகளை கூவி, கூவி விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
   

வைகோவை மதித்து குடிப்பழக்கத்தை நிறுத்திய விவசாயி


 புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி மல்லிகைபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் மு. ரெங்கசாமி (வயது 53). ம.தி.மு.க. வின் மேலவை பிரதிநிதியான இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
   இவருக்கு திருமணத்துக்கும் முன்பு இருந்தே மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தற்போது மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வரும் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வை.கோ-வின் கோரிக்கையை ஏற்ற ரெங்கசாமி கடந்த 4 மாதங்களாக குடி பழக்கத்தை நிறுத்தியுள்ளார். அதற்காக வடகாட்டில் பாராட்டுவிழா நடைபெற்றது.
  பாராட்டுவிழாவுக்கு வடகாடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாத்தையா தலைமை தாங்கினார்.   ஊராட்சிமன்ற உறுப்பினர் அன்பழகன், ஏ.வி. பேரவை நிர்வாகிகள் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   இதுகுறித்து குடியை நிறுத்திய ரெங்கசாமி பேசியது.
நான் ம.தி.மு.க.கட்சியின் பொறுப்பாளராக இருந்தாலும் தொடர்ந்து விவசாயம் தொடர்பான கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் தொகையை தனது செலவுக்காவே பயன்படுத்தினேன்.  30 வயத்தில் தொடங்கிய இந்த குடிப் பழக்கம் 23 ஆண்டுகள் நீடித்தன.
கரூரில் கட்சி சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றபோது அங்கு மதுவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார். அதேபோல, தெருத் தெருவாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது வேண்டுகோள்படியே மதுகுடிப்பதனால்தான் விபத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களும் அதிகமாக நடக்கின்றன. மதுக்கடைகளை பூட்டுவது அரசின் கொள்கை.  ஆனால், வை.கோ.வின் கொள்கையை ஏற்று நாம் குடிக்காமல் இருந்தால் அரசு தனது கொள்கையை மாற்றிக்கொள்ளும் என்பதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மதுவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டேன். அதன்பிறகு மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றபோது இதற்கு மேலும் குடித்திருந்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர் கூறினார். மதுவை நிறுத்தியதால் கடந்த 4 மாதங்களாக மனநிம்மதியாக இருக்கிறேன். என்னிடமும் பணம் இருக்கிறது. திருமணத்துக்கு முன்பிருந்தே குடித்தேன் அதனால் எனது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம்தான் நான்போதைக்கே அடிமையாகிவிட்டேன். தற்போது மனஉறுதியுடன் மதுவை கைவிட்டேன். நிம்மதியாக இருக்கிறேன்.  ஆகையால், உரிய உளவியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று தன்னம்பிக்கையுடன் இருந்தால் மதுகுடிக்கும் எண்ணமும் வராது, நம்மையும் இச்சமுதாயம் மனிதனாக மதிக்கும் இவ்வாறு பேசினார்.
   பாராட்டுவிழாவில் ஏ.வி. பேரவை நிர்வாகிகள் ராஜேஸ், பிரபாகரன், கோபு, செந்தமிழ்ச்செல்வன், பத்மநாதன், வடிவேல், சுப்பிரமணியன், கப்பல்சிவா மற்றும் பலர் கலந்துகொண்டு ரெங்கசாமியை வாழ்த்திப்பேசினர்.

சனி, 16 மார்ச், 2013

நிறைவேறும் நம்மாள்வார் கோரிக்கை



 சிறுதானியங்களை பாதுகாக்க வேண்டும், இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டுமென்பது அய்யா இயற்கை விஞ்ஞானி நம்மாள்வாரின் பிரதான கோரிக்கை. இந்த நியாயமான கோரிக்கையை அவர் பல்வேறு வகையில் மக்களிடமும், ஆட்சியாளர்களிடமும் எடுத்துகூறி வருகிறார்.  ஆரம்பத்தில் இதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. நிலைமையை உணர்ந்த அதிகாரிகள் தற்போது, விவசாயிகள் வைத்திருக்கும் பாரம்பரிய தானியங்களை அந்தந்த பகுதியிலுள்ள வேளாண் ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து காப்புரிமை பெற்றுக்கொள்ளுங்கள் என வேளாண் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இப்பணியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ளது.
  தமிழ்நாடுக்கு சொந்தமான வேம்பு மரம் அமெரிக்கா காப்புரிமை பெற்றபோதுதான் உணர்ந்துள்ளார்கள் நம்பஆட்கள். இதையாவது முழுசா நிறைவேற்றட்டும். அய்யாவின் கோரிக்கை நிறைவேறட்டும்.