மழை இல்லை, காவிரியில தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, உரம்- மருந்து வாங்கமுடியலை, விளைஞ்ச பொருளை விற்கமுடியலை. இதனால விவசாயமே வெறுத்துப்போச்சு. எதோ ஒரு வழியில மனிதர்களுக்கெல்லாம் உணவு கிடைக்கிது. ஆனால், ஏழைகள் வளர்த்த மாடுகளை எங்க கொண்டுபோவது, வைக்கோலும் இல்லை, புண்ணாக்கு விலையெல்லாம் மலையேரிப்போச்சு, கொஞ்சம் தரிசு நிலம் கூட இல்லாம போச்சே.. அதைத்தான் கேக்குறாங்க (28.01.2013)புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே கொத்தமங்கலம் மக்கள். சும்மாவா, மாடுகளோடுதான்....
திங்கள், 28 ஜனவரி, 2013
வறட்சியின் உச்சம்: வீதிக்கு வந்தது மனிதர்கள் மட்டுமா, மாடுகளும்தானே
மழை இல்லை, காவிரியில தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, உரம்- மருந்து வாங்கமுடியலை, விளைஞ்ச பொருளை விற்கமுடியலை. இதனால விவசாயமே வெறுத்துப்போச்சு. எதோ ஒரு வழியில மனிதர்களுக்கெல்லாம் உணவு கிடைக்கிது. ஆனால், ஏழைகள் வளர்த்த மாடுகளை எங்க கொண்டுபோவது, வைக்கோலும் இல்லை, புண்ணாக்கு விலையெல்லாம் மலையேரிப்போச்சு, கொஞ்சம் தரிசு நிலம் கூட இல்லாம போச்சே.. அதைத்தான் கேக்குறாங்க (28.01.2013)புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே கொத்தமங்கலம் மக்கள். சும்மாவா, மாடுகளோடுதான்....
செவ்வாய், 15 ஜனவரி, 2013
சமத்துவத்தை உணர்த்தும் கிராம மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே புள்ளான்விடுதியில் ஆதிதிராவிடர் உள்பட அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பொதுவான இடத்தில் ஒரே அடுப்பில் பாரபட்சம் இல்லாமல் பொங்கல் வைத்து அதை ஒன்றாக படையலிட்டு அதை அனைவரும் பிரித்து பகிர்ந்து ருசித்து பொங்கல் விழா கொண்டாடினர். இதுதான் உண்மையான சமத்துவபொங்கல். இதையே அனைவரும் பின்பற்றுவோமே
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
தமிழனுக்கு வாழ்த்து
அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் தின வாழ்த்துக்கள்.
கே. சுரேஷ் நிருபர்
வடகாடு, ஆலங்குடி
புதுக்கோட்டை. 622304
வெள்ளி, 4 ஜனவரி, 2013
சோறு இல்லாமல் சுருங்கும் வயிறு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மேலக்கோட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் முத்து(25). பெற்றோர் இல்லாத பெண்ணை 2 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவரும், சொந்த இடம் இல்லாமல் ஆற்றின் கரையில் குடில் அமைத்து தாய், மனைவியுடன் 3 கைக்குழந்தைகளோடு வசித்தவரான வே. வெற்றியப்பனும் வெடிதொழில்சாலையில் கூலிக்கு வெடி கட்டும் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் முத்து உடல் சிதறியநிலையில் இறந்தார். வெற்றியப்பன் படுகாயம் அடைந்தார். இந்த சூழலில் இவர்களது உழைப்பால் கிடைத்தது நாள் ஒன்றுக்கு கூலி ரூ. 200. இறப்புக்கும், பாதிப்புக்கும் பின்னால் அந்த தொழில்சாலையினால் பயன்(ஒன்றும் இல்லை)?. இதுபோன்ற மரணபயத்தில் வேலை பார்ப்போருக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேல் இத்தகைய தொழில்சாலைகளுக்கு தடைவிதிக்க வேண்டும். பாவத்தை ஆட்சியாளர்கள் சுமக்கவேண்டாமே........
முத்து: இவரது தாய், தந்தை உடல்நிலை பலவீனமானவர்கள். அண்ணனும் அப்படியே இவர்களால் குடும்பத்துக்கு வருமானம் இல்லை.அதோடு முத்துக்கு கல்யாணம் ஆயிற்று. 4 பேர்களது வாழ்வாராத்துக்கு ஒரே வழி முத்து ஒருவரே. தற்போது அவர் இல்லை. இனிமேல் இந்தக் குடும்பத்தினர் ஒரு வேலை சாப்பாட்டுக்கு என்ன செய்வார்களோ?.
வெற்றியப்பன்: வெடி சத்தம் கேட்டு கைக்குழந்தைகளை விட்டுவிட்டு புறப்பட்டார் அவரது மனைவி மீனாட்சி. அதற்குள் கருவை முள்செடிக்குள் சிக்கிய குழந்தைகள் கத்தி, கதறினர். அதைப் பார்த்த தாய் 3 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு கனவனைப் பார்க்க புறப்பட்டார். அதற்குள் வெற்றியப்பன் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பார்க்க போகாமல் இங்கேயே இருக்குறீகளே என்றதற்கு..
அவரது பதில், அவ்வளது தூரம் போக எனது கையில் காசு இல்லை என்றார். என்ன செய்யும் இந்தக் குடும்பம். இவர்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி வெற்றியப்பன் இறந்தார். அதோடு உரிமையாளர் காதர்மைதீனும் இறந்துவிட்டார்.
புதன், 26 டிசம்பர், 2012
முத்துக்குமரன் நினைவு அறக்கட்டளை
மனிதனுக்கான குணத்தையும், மக்கள் பிரதிநிதிக்கான குணத்தையும் கொண்டவருக்காக
![]() |
திங்கள், 24 டிசம்பர், 2012
வடகாட்டில் மாநில அளவில் கைப்பந்துபோட்டி அன்புத்தங்கம் அணிக்கு முதல்பரிசு
புதுக்கோட்டை மாவட்டம வடகாடு அன்புத்தங்கம் கைப்பந்து கழகத்தின் முன்னாள் வீரர் டி.ஏ.எஸ்.டி. தர்மராஜ் நினைவாக இரண்டு நாள் பகல், இரவாக கைப்பந்து போட்டி நடைபெற்றது. சுழற்சி முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம், கேரள மாநிலத்தில் இருந்து 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். இப்போட்டியில் தகுதிச்சுற்றில் நாக்அவுட் முறையும், பரிசுக்கான தேர்வில் லீக் முறையும் பின்பற்றப்பட்டது. ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல்பரிசு பெற்ற வடகாடு அன்புத்தங்கம் அணிக்கு ரூ. 10 ஆயிரத்து ஒன்றும், இரண்டாம் பரிசு பெற்ற திருவாரூர் அணிக்கு ரூ. 8 ஆயிரத்து ஒன்றும், மூன்றாம் பரிசு பெற்ற திருச்சி காவல் துறை அணிக்கு ரூ. 6 ஆயிரத்து ஒன்றும், நான்காம் பரிசு பெற்ற மேற்பனைக்காடு அலெக்ஸாண்டர் அணிக்கு ரூ. 4 ஆயிரத்து ஒன்றும், ஐந்தாம் பரிசு பெற்ற கேரளா அணிக்கு ரூ. 3 ஆயிரத்து ஒன்றும், ஆறாம் பரிசு பெற்ற வடகாடு அன்புத்தங்கம் சிறுவர் அணிக்கு ரூ. 2 ஆயிரத்து ஒன்றுடன் தர்மராஜ் நினைவுக் போப்பையும் வழங்கப்பட்டது.
மேலும், மகளிர் பிரிவில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி முதல் பரிசையும், முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாம் பரிசையும், வடகாடு மகளிர் அணி மூன்றாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற இந்த அணிகளுக்கும் ரொக்கத்தொகையுடன் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு சுற்றிலும் தனித் திறமையை வெளிப்படுத்திய வீரருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்துப்போட்டியில் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்ற கீரமங்கலம் மகளிர் பள்ளி அணிக்கு பரிசு வழங்கியபோது எடுத்தபடம்
புதன், 19 டிசம்பர், 2012
விபத்தில் காயம் அடைந்த புதுமாப்பிள்ளை பலி துக்கம் விசாரிக்க வந்த உறவினர் அதிர்ச்சியில் பலியானார். திருமணமாகி 15 நாளில் நடந்த பரிதாபம்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் திருமணமாகி 15 நாளில் விபத்தில் காயம் அடைந்த புதுமாப்பிள்ளை இறந்தார். துக்கம் விசாரிக்க வந்தவர் அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வடகாடு ஊராட்சி பரமநகர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன். இவரது மகன் இளங்கோவன்(31). இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகள் தனம் ஆகியோருக்கும் நவ.30-ம் தேதி வடகாட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வருதற்காக டிச. 14-ம் தேதி மோட்டார் சைக்கிளில் இளங்கோவன் சென்றுள்ளார். அப்போது, அம்மையாண்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இளங்கோவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான சூழலில் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்ற இளங்கோவன் புதன்கிழமை இறந்தார்.
இறந்தது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தாடிவயல் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் வடகாடுக்கு இளங்கோவன் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்த உறவினர்களுடன் இவரும் அழுது உருண்டு புறண்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 அவசர வாகனம் வரவழைக்கப்பட்டு அதன்மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் ஜெயபால் இறந்துவிட்டார். இறந்த ஜெயபால் விபத்தில் இறந்த இளங்கோவனின் மனைவி தனத்தின் உறவினராவார். புதுமாப்பிள்ளை இறந்ததும், அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து உறவினர் இறந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







