வெள்ளி, 15 மார்ச், 2013

காங்க. திமுவை நெருக்கடிக்குள்ளாக்கும் அதிமுக எம்எல்ஏ


புதுக்கோட்டைமாவட்டத்தில் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் குப கிருஷ்ணன் வைத்துள்ள பதாகையானது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்டியை ஏற்படுத்தியுள்ளது.
      ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள ஐ.நா. வின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் திமுக, விடுதலைச்சிறுத்தை கட்சியினர் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை(12.03.2013) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இந்நிலையில் ஆலங்குடியில் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் (அதிமுக) குப கிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் டி.எல். ரத்தினம், நெவளிநாதன் ஆகியோர் சார்பில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களையின் உறுப்பினர்கள் இலங்கை அதிபருக்கு மரியாதை செலுத்துவது, அவரிடம் இருந்து பரிசு பெறுவது போன்ற படத்துடன்கூடிய பதாகை வைக்கப்பட்டது.
  இப்பதாகை தங்கள் கட்சியை இழிவுபடுத்துவதாக கருதிய திமுகவினர், பதாகையை அகற்ற வேண்டுமென காவல்துறை அலுவலர்கள், ஆலங்குடி வட்டாட்சியர் ஸ்டாலினுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த பதாகை அகற்றப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், மீண்டும் அதே இடத்தில் அதே பதாகையை வைத்தனர். இதனால் அதிமுக, திமுகவினரிடையே மறைமுகமாக தாக்குதல் ஏற்பட்டது.
   இந்நிலையில் மத்திய அரசை ஆதரித்துவரும் கருணாநிதி தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தபோது இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர், அதற்கு காரணமான அந்நாட்டு அதிபர் வருகையின்போது இந்தியாவில் உற்சாக வரவேற்பு, சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பியது, டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்யாதது என ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுவிட்டு தற்போது போராட்டம் நடத்துவது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும். இதையே இந்த பதாகை உணர்த்துகிறது என்றார் குப கிருஷ்ணன்.
   புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வைகோ, பழ.நெடுமாறன், சீமான், பாவாணன், குளத்தூர்மணியன், காசிஆனந்தன், மணியரசன் மற்றும் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரால் பலமுறை ஈழஆதரவாக பலமுறை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருப்பது    இப்பகுதியினரின் தமிழ்உணர்வை பறைசாற்றுகிறது.
  மேலும், மத்திய நிதிஅமைச்சரின் தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி தொகுதியில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினரே ஈழத்தமிழர் உணர்வாளர்களுக்கு ஆதரவாக பேசிவருவதும், இதுபோன்று பதாகை வைத்திருப்பதும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
     

புதன், 13 மார்ச், 2013

காஷ்மீரோடு ஈழப்பிரச்னையை ஒப்பிடக்கூடாது


 
புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் இங்குள்ள தமிழருக்கும், ஈழபெண்ணுக்கும் புதன்கிழமை நடைபெற்ற திருமணவிழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசியது.
   உயிருக்கு இணையானதாக கருதக்கூடிய தமிழ்மொழி, இனம் உள்ளிட்ட பிரச்னையிலிருந்து மத்திய அரசு நலுவ முயல்வது தவறானது.தேசிய மொழி, இனத்தை காக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
    இன்று இலங்கை சிக்கலுக்கு உதவினால் நாளை காஷ்மீர் சிக்கலுக்கும் அந்நிய நாடுகள் நம்மை நிர்பந்திக்குமென கருதி அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஈழப்பிரச்னையோடு காஷ்மீர் பிரச்னையை மத்திய அரசு ஒப்பிடகூடாது.
   காஷ்மீரில் குண்டுவீச்சு, பாலியல் தொல்லை, வன்முறை இவைகளெல்லாம் இல்லை, அதேபோல, அங்கிருந்து அகதிகளாக யாரும் வெளியேறவில்லை. மேலும்,அங்குள்ளவர் இந்திய அரசுக்கு உயர்பதிவிக்கெல்லாம் வரலாம். ஆனால், இதற்கு மாறாகவே தமிழ்ஈழத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழ்ஈழத்தில் உள்ள ஒருவரை அதிபராக, பாதுகாப்பு அதிகாரியாக இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதை உணரவேண்டும்.
     அதேபோல,  இலங்கைக்கு நாம் உதவாவிட்டால் சீனா உதவும் என்று கூறுவதும் தவறானது. இலங்கை தமிழர்கள் அண்டை நாடுகளில், உரிமையுள்ள நாடான இந்தியாவும், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளால் காப்பாற்றப்படவில்லை. ஆகையால்தான், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போராட வேண்டியிருந்தது. மேலும் தமிழ்ஈழத்தில் போர் நடக்கும் என்றார் காசிஆனந்தன். இவ்விழாவில் பழ.நெடுமாறன், தமிழ்சேதிய பொதுஉடைமைக் கட்சித் தலைவர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
 



ஞாயிறு, 10 மார்ச், 2013

கல்வியில் மாற்றம் காலத்தின் கட்டாயம்




 புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் ஆறுமுகம் மெட்ரிக் பள்ளியில் 7.3.2013-ல் நடைபெற்ற ஆண்டுவிழாவில் மாணவர்களைப் பாராட்டி  சமூகஆர்வளர், வழக்குரைஞர் எஸ்.பி. ராஜா. பேசியது.
  கல்விதான் நாட்டை வலிமைப்படுத்துமென கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் ஏராளமாய் நிதி ஒதுக்குகிறது. அதேசயம், மாணவர்கள் உயிரைமாய்த்துக் கொள்ளுதல், சமூகவிரோத செயலில் ஈடுபடுதல், பாலியல், திராவகம் வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் எல்லாம் கல்வியானது சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என்பதை அடையாளப்படுத்துவதாக கருதப்படுகிறது.
   இதையெல்லம் இப்படியே விட்டுவிட்டால் எதிர்காலத்தில் சமூகசீரழிவுகள் இதைவிட அதிகமாகும். இப்போதைய பிரச்னைகளால் பிள்ளைகளை வளர்க்க பெற்றோர்கள் கவலைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கல்வியை கற்றுக்கொடுத்துவிட்டால் சமூகம் ஒழுக்கமாக இருக்கும் என்பதை நிலைநாட்டும் வகையில் சமூகத்தோடு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் கல்வியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றார்.
 
 
                                                                             
       

வெள்ளி, 8 மார்ச், 2013

மதுவுக்கு எதிரான பிரசாரத்துக்கு பெண்களே பொருத்தமானவர்கள்.



புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் 8.3.2013 அன்று நடைபெற்ற மகளிர் தினவிழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் பாலச்சந்தர் பேசியது.
   அடுத்தடுத்த தலைமுறைக்கு தீங்கிழைக்கும்  பிளாஸ்ட்டிக் பொருளின் பயன்பாட்டை முழுமையாக தானும் நிறுத்திக் கொண்டு இதை மற்றவர்களிடமும் எடுத்துக்கூற வேண்டும். அதேபோல,  சமூகத்தை சீரழிக்கும் மதுவுக்கு எதிராக பெண்கள் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் அதுதான் சரியான தீர்வை ஏற்படுத்தும் என்றார்.

கோடை மழையும்,பயறு சாகுபடியும்

  புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் க. வைரவன்   வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   இலங்கை அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.   கோடையில் பெய்யும் இம்மழையை பயன்படுத்தி நெல் அறுவடை செய்யப்பட்ட நிலம் உள்ளிட்ட விளை நிலங்களை நன்கு உழவு செய்ய வேண்டும்.  
    நீர்பாசன வசதி மற்றும் வறட்சியான நிலங்களில் உளுந்தையும், முழுவதும் மானாவாரியாக பயிர் செய்யக் கூடிய நிலங்களில் எள்ளையும் தேர்ந்துதெடுத்து விதைக்கலாம்.
  உளுந்து சாகுபடி:
       உளுந்தைப் பொறுத்தவரையில் மானாவாரி மற்றும் இறவையில் வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6 ரகத்தையும், நெல் அறுவடை செய்யப்பட்ட தரிசில் ஏ.டி.டி 3, வம்பன் 4, வம்பன் 5 மற்றும் வம்பன் 6 ரகங்களை விதைக்கலாம். 
    தேவையான உளுந்து விதை:  உழுந்தை தனிப்பயிராக பயிரிட ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையும் ஊடுபயிராக பயிரிட 4 கிலோ விதையும் மற்றும் நெல் தரிசில் பயிரிட 10 கிலோ விதையும் தேவைப்படும்.
    எள்சாகுபடி: 
           எள் பயிரிடும் விவசாயிகள் மானாவாரி மற்றும் இறவையில் எள் ரகங்களான டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி. 6, கோ 1, வி.ஆர்.ஐ1, எஸ்.வி.பி.ஆர்.1 ரகங்களையும், நெல் தரிசு மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் பயிரிடும் விவசாயிகள் வி. ஆர்.ஐ. 1 ரகத்தினையும் தேர்வு செய்து இப்பருவத்தில் விதைக்கலாம்.
  விவசாயிகள் இந்த மழையைப் பயன்படுத்தி பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களைப் பயிரிட்டு நல்ல மகசூல் பெறலாமென்றார். மேலதிக தகவல்களுக்கு நிலையத் தலைவரை 94431 70556 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். 

சனி, 2 மார்ச், 2013

தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு:



   மறைந்த புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி விபத்தில் இறந்தார். அவருக்கு முதலாமாண்டு நினைவுநாளையொட்டி பல்வேறு பணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆகையால் அதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சட்டத்தால் மீண்டது காவிரி: மீட்கப்படும் கச்சத்தீவு-- கு.ப. கிருஷ்ணன் பேச்சு


புதுக்கோட்டை மாவட்டம்    ஆலங்குடியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் பிப்ரவரி. 28-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி  ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன்.பேசியது.    காசுகொடுத்தால் கற்பழிப்பு தடுக்கப்படுமா?  பெண்களை  பாலியலுக்குள்ளாக்குவோருக்கு தமிழக முதலமைச்சரின் ஆலோசனைப்படி அதிகபட்ச தண்டனைதான் தீர்வாகுமேதவிர நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிர்பயா நிதி தீர்வாகாது.   யார்தமிழ்உணர்வாளர்:        தமிழகத்தில் மின்தடையை ஏற்படுத்திய திமுக, மத்திய அரசிடம் இருந்து மின்சாரத்தை பெற முயலாமல் இதே நிலை நீடித்தால்தான் தமிழகஅரசை குற்றம்சாட்டியே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாமென்ற கலைஞரின் கனவு பலிக்காது.     தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை பெற்றுத்தராத தமிழகத்தின் மத்தியஅமைச்சர்கள் வீட்டை முற்றுகையிடவேண்டுமென்ற போராட்டத்தை தமிழகமுதல்வர் அறிவித்தால் அதை நாங்கள் நிறைவேற்றத் தயார்.     இலங்கையில் லட்சம் தமிழர்களைக் கொன்றதையும், அதற்கு துணையான இலங்கை அதிபரை இந்தியாவுக்குள் நுழைய தடுக்கவும், மத்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்வதைத் தடுக்கவும்,  தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள டக்ளஸ்தேவானந்தாவை கைது செய்ய தவரியவரும், சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியவருமான கலைஞரோ, இப்போது கண்டன அறிவிக்கை விடுவதும், இலங்கை தூதரகத்தை முற்றுகையிடபோவதாகவும் அறிவிக்கிறார். இத்தகைய நாடகமெல்லாம் கலைஞருக்கு எதார்த்தமானது. இதை தமிழர்கள் உணர்வார்கள்.     மக்களவைத் தேர்தலே தமிழர்களுக்கு தீர்வு:

         தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை படுதோல்வி அடையச் செய்வதே ஈழத்தமிழர்களுக்கு நாம் காட்டும் உண்மையான இரக்கமாகும்.  40 ஆண்டுகளாக போராடிய காவிரி பிரச்னைக்கு உச்சநீதிமன்றத்தின் உதவியால் தீர்வுகண்ட தமிழமுதலமைச்சரால், தமிழர்களின் மற்றொரு பிரதான பிரச்னையாக திகழும் கச்சத்தீவையும் மீட்கமுடியும்.      தமிழகத்தில் தெற்காசிய தடகளப்போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்ற அறிவித்தார் முதலமைச்சர். அந்த துணிவுகூட மத்தியஅரசுக்கு இல்லாமல் போனதால்தான் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் வெட்டிச்சென்றுள்ளனர்.     எதிரியிடம் சரணடையும் காங்.      முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை இலங்கையிலேயே வைத்து துப்பாக்கியால் அடிக்க முயன்ற சிங்களர்களைவிட தமிழர்களையே எதிரியாக கருதி  இலங்கைக்கு காங்கிரஸ்  அரசு அளிக்கும் உதவியால் இந்தியாவின் வடக்கு, தெற்கு பகுதியில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.ஆளுமைத்திறன் கொண்டவர் ஜெயலலிதா     நாட்டையே அச்சுறுத்தும் சீனரை எதிர்க்க காங்கிரஸ் அரசிடம் ஆளுமை, விலிமை இல்லை. ஆகையால், வலிமையான ஆளுமைத் திறன் கொண்ட தமிழக முதலமைச்சர்தான் இந்திய அரசுக்கு பொருத்தமாவார் என்றார்.