வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

வறட்சியால் வாழ்வை இழக்கும் புதுகை விவசாயிகள்


விவசாயத்தையே முதுகெலும்பாக கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு,காவிரி பாசனத்துடன் பருவமழையைக் கொண்டும் விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.
     தமிழகத்தின் நீராதாரத்துக்கு பெரிதும் பயனளிக்கும்  வடகிழக்கு பருவமழை பொய்த்தது, கர்நாடகம் கைவிரித்தது, தமிழகத்தின் மின்உற்பத்தி மிகவும் பின்னடைவானது. இதனால் நெல் உள்ளிட்ட அனைத்து விவசாயமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் வீதிக்கு வந்து போராடியதைத் தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களாக உள்ள தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த தமிழகஅரசு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளதோடு, சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது.
   மேலும் உள்ள வறட்சி மாவட்டங்களை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான குழுஆய்வு மேற்கொண்டு அளிக்கும் ஆய்வு அறிக்கையின்படியே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழகஅரசு அறிவித்துள்ளது.
     டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி ஆகிய வட்டங்களில் காவிரி, ஆழ்துளை கிணறு மூலம் 2.65 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தோடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் வளர்க்கப்படும் கால்நடைகளை அடிமாடுகளுக்கு விற்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
       புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில்  காரிப் பருவத்தில் மட்டும் சுமார் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஜனவரியில் கொள்முதல் தொடங்கியது. இந்நிலையில் இதே காலகட்டமான பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு மையத்திலும் சுமார் 700 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி மொத்த மையத்திலும் 44 ஆயிரத்து 100 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  ஆனால், இந்த ஆண்டு  அதே மாவட்டத்தில் 25 மையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதில் 2 மையங்களில் சுமார் 7 டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
  மேலும், தமிழகத்தில் மாடு விற்பனைக்கு புகழ்பெற்று விளங்கும் புதுக்கோட்டையில் காளை மாடுகளாக காட்சி அளித்த மாட்டுச் சந்தையானது வறட்சியின் தாக்கத்தால் முல்மேல் போரித்திய துணியாக எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் கன்றுக் குட்டிகளுடன்கூடிய பசுமாடுகளே விற்பனைக்கு வருகின்றன. அதிலும், வாரச்சந்தையான வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கெல்லாம் முடியும் சந்தையில் நண்பகல் வரை காத்திருந்தாலும் யாரும் எதிர்பார்த்த விலைக்கு கேட்காததால் மாடுகளை அடிமாடு விலைக்கு விற்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.   அதோடு அறந்தாங்கி சந்தையிலும் விற்பனைக்காக ஓட்டிவரப்பட்ட மாடுகளை விற்பனை செய்யமுடியாமல் மீண்டும் வீட்டுக்கே ஓட்டிச் செல்கின்றனர்.
      இந்நிலையைக் கண்டித்து வடகாடு அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் கால்நடைகளை பாதுகாக்க கால்நடைகளுக்கு  அரசு மானியவிலையில் தீவனம் வழங்கவும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி கால்நடைகளுடன் அண்மையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆகையால் வறட்சியன் தாக்கத்தால் நெல்கொள்முதல் குறைவு, கால்நடைகளை அடிமாடுகளுக்கு விற்பது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரேஷன்கடைகளை கூட்டம் அலைமோதுவது இவைகளையெல்லாம் வறட்சிக்கான ஒரு சான்றாக கொண்டு விரைவில் வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
   இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் கூறியது.  நிலத்தை நம்பி மாற்றுவழி தெரியாமல் திகைத்து நிற்கும் விவசாயிகளையும், விவசாயைத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதற்கு டெல்டா மாவட்டங்களுக்கு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் புதுக்கோட்டை மாவட்ட டெல்டா பகுதிக்கும், அதோடு, 1989-ல் ஒருங்கிணைந்த டெல்டாபகுதியாக அறிவிக்கப்பட்ட ஆலங்குடி பகுதிக்கும் அனுமதித்து நிவாரணம் வழங்க வேண்டும். இக்கோரிக்கை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் போராட்டத்தின் வாயிலாக கொண்டு செல்லப்படும் என்றார்.


நாங்க பொறுப்பல்ல... பிறரை சொல்லி தப்பிக்கும் அரசியல் வாதிகள்


  புதுக்கோட்டை மாவட்டத்தில் (22.02.2013 )இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டையில் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியைக் குறைசொல்லி தமிழகத்தை ஆளும் அதிமுகவினர். அதே மாவட்டம் ஆலங்குடியில் மாநிலத்தை ஆளும் அதிமுகவை குறை சொல்லி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியினர். இருவர்களது கோரிக்கையும் தமிழகத்தில் மின்தடை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளாகும். இருவருமே மாறி மாறி குறை சொல்லிக்கொண்டால் யார்தான் இந்தப் பிரச்னைகளை தீர்ப்பது.
 இத்தகைய ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக நாம் உணர்வது இப்பிரச்னையை இருவராலும் தீர்க்கமுடியாது என்பதுதானே.. அப்படி என்றால் யார்தான் தீர்ப்பது.  மக்களே உணருங்கள்.


செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

தயாராகும் மாவீரன் வரலாற்றுச்சுவடு..


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் அ. வெங்கடாசலம். இத்தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராவும் இருந்த இவர் 7.10.2011-ல் படுகொலை செய்யப்பட்டார். இவரது நினைவுகளை பதிவு செய்யும்விதமாக முக்கிய புகைப்படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. ஆகையால், மாவீரன் அ. வெங்கடாசலத்தைப் பற்றிய தொகுப்புகள் இருந்தால் இந்த வலைதளத்தை அவசியம் தொடர்புகொள்ளவும்.
  truespy@rediffmail.com

திங்கள், 4 பிப்ரவரி, 2013

மாவீரன் நினைவாக வடகாட்டில் பிப். 9-ல் கபாடிபோட்டி


புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் 09.02.2013 தேதி பகல், இரவாக கபாடி போட்டி நடைபெறுகிறது. வடகாடு ஏ.வி. பேரவை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள மைதானத்தில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவாக கபடி போட்டி நடத்தப்படுகிறது.  இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 4 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 3 ஆயிரம் மற்றும் நான்காம் பிரசு ரூ. 2 ஆயிரம் மற்றும் பதக்கம், நினைவு பரிசும் வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகள் பிப்ரவரி 9-ம் தேதி காலை 11 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் தகவலுக்கு 97510 26224, 97864 99841, 86084 06766 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

                                                     கோப்புக்காட்சிdinamanialangudy@gmail.com

சனி, 2 பிப்ரவரி, 2013

முத்துக்குமரனின் கோரிக்கைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் நிறைவேறுமோ?





புதுக்கோட்டை, மச்சுவாடியில் உள்ள தொழுநோயாளிகளோடு 2012-ல் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முன்னாள் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பி. முத்துக்குமரனிடம் காலணிகளை அரசே வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டுமென எம்எல்ஏவிடம் அங்குள்ள மக்கள் கண்ணீரோடு கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கைகள் 2013-ல் நிறைவேறியது. ஆனால், கோரிக்கையை முதலமைச்சரிடம் சொன்னவரைக் காணவில்லையே.....
                                                       என்கிறார்கள் நோயாளிகள்