செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

தயாராகும் மாவீரன் வரலாற்றுச்சுவடு..


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் அ. வெங்கடாசலம். இத்தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராவும் இருந்த இவர் 7.10.2011-ல் படுகொலை செய்யப்பட்டார். இவரது நினைவுகளை பதிவு செய்யும்விதமாக முக்கிய புகைப்படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. ஆகையால், மாவீரன் அ. வெங்கடாசலத்தைப் பற்றிய தொகுப்புகள் இருந்தால் இந்த வலைதளத்தை அவசியம் தொடர்புகொள்ளவும்.
  truespy@rediffmail.com

திங்கள், 4 பிப்ரவரி, 2013

மாவீரன் நினைவாக வடகாட்டில் பிப். 9-ல் கபாடிபோட்டி


புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் 09.02.2013 தேதி பகல், இரவாக கபாடி போட்டி நடைபெறுகிறது. வடகாடு ஏ.வி. பேரவை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள மைதானத்தில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவாக கபடி போட்டி நடத்தப்படுகிறது.  இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 4 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 3 ஆயிரம் மற்றும் நான்காம் பிரசு ரூ. 2 ஆயிரம் மற்றும் பதக்கம், நினைவு பரிசும் வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகள் பிப்ரவரி 9-ம் தேதி காலை 11 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் தகவலுக்கு 97510 26224, 97864 99841, 86084 06766 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

                                                     கோப்புக்காட்சிdinamanialangudy@gmail.com

சனி, 2 பிப்ரவரி, 2013

முத்துக்குமரனின் கோரிக்கைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் நிறைவேறுமோ?





புதுக்கோட்டை, மச்சுவாடியில் உள்ள தொழுநோயாளிகளோடு 2012-ல் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முன்னாள் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பி. முத்துக்குமரனிடம் காலணிகளை அரசே வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டுமென எம்எல்ஏவிடம் அங்குள்ள மக்கள் கண்ணீரோடு கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கைகள் 2013-ல் நிறைவேறியது. ஆனால், கோரிக்கையை முதலமைச்சரிடம் சொன்னவரைக் காணவில்லையே.....
                                                       என்கிறார்கள் நோயாளிகள்
 

திங்கள், 28 ஜனவரி, 2013

வறட்சியின் உச்சம்: வீதிக்கு வந்தது மனிதர்கள் மட்டுமா, மாடுகளும்தானே




  மழை இல்லை, காவிரியில தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, உரம்- மருந்து வாங்கமுடியலை, விளைஞ்ச பொருளை விற்கமுடியலை. இதனால விவசாயமே வெறுத்துப்போச்சு. எதோ ஒரு வழியில மனிதர்களுக்கெல்லாம் உணவு கிடைக்கிது. ஆனால், ஏழைகள் வளர்த்த மாடுகளை எங்க கொண்டுபோவது, வைக்கோலும்  இல்லை, புண்ணாக்கு விலையெல்லாம் மலையேரிப்போச்சு, கொஞ்சம் தரிசு நிலம் கூட இல்லாம போச்சே.. அதைத்தான் கேக்குறாங்க (28.01.2013)புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே கொத்தமங்கலம் மக்கள். சும்மாவா, மாடுகளோடுதான்....

செவ்வாய், 15 ஜனவரி, 2013

சமத்துவத்தை உணர்த்தும் கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே புள்ளான்விடுதியில் ஆதிதிராவிடர் உள்பட அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பொதுவான இடத்தில் ஒரே அடுப்பில் பாரபட்சம் இல்லாமல் பொங்கல் வைத்து அதை ஒன்றாக படையலிட்டு அதை அனைவரும் பிரித்து பகிர்ந்து ருசித்து பொங்கல் விழா கொண்டாடினர். இதுதான் உண்மையான சமத்துவபொங்கல். இதையே அனைவரும் பின்பற்றுவோமே

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

தமிழனுக்கு வாழ்த்து



அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் தின வாழ்த்துக்கள்.
கே. சுரேஷ்    நிருபர்
 வடகாடு, ஆலங்குடி
 புதுக்கோட்டை. 622304

வெள்ளி, 4 ஜனவரி, 2013

சோறு இல்லாமல் சுருங்கும் வயிறு


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மேலக்கோட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் முத்து(25). பெற்றோர் இல்லாத பெண்ணை 2 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவரும், சொந்த  இடம் இல்லாமல் ஆற்றின் கரையில் குடில் அமைத்து தாய், மனைவியுடன் 3 கைக்குழந்தைகளோடு வசித்தவரான வே. வெற்றியப்பனும் வெடிதொழில்சாலையில் கூலிக்கு வெடி கட்டும்  ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் முத்து உடல் சிதறியநிலையில் இறந்தார். வெற்றியப்பன் படுகாயம் அடைந்தார்.  இந்த சூழலில் இவர்களது உழைப்பால் கிடைத்தது நாள் ஒன்றுக்கு கூலி ரூ. 200. இறப்புக்கும், பாதிப்புக்கும் பின்னால் அந்த தொழில்சாலையினால் பயன்(ஒன்றும் இல்லை)?.   இதுபோன்ற மரணபயத்தில் வேலை பார்ப்போருக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேல் இத்தகைய தொழில்சாலைகளுக்கு தடைவிதிக்க வேண்டும். பாவத்தை ஆட்சியாளர்கள் சுமக்கவேண்டாமே........
   முத்து: இவரது தாய், தந்தை உடல்நிலை பலவீனமானவர்கள். அண்ணனும் அப்படியே இவர்களால் குடும்பத்துக்கு வருமானம் இல்லை.அதோடு முத்துக்கு கல்யாணம் ஆயிற்று. 4 பேர்களது வாழ்வாராத்துக்கு ஒரே வழி முத்து ஒருவரே. தற்போது அவர் இல்லை. இனிமேல் இந்தக் குடும்பத்தினர் ஒரு வேலை சாப்பாட்டுக்கு என்ன செய்வார்களோ?.
  வெற்றியப்பன்: வெடி சத்தம் கேட்டு கைக்குழந்தைகளை விட்டுவிட்டு புறப்பட்டார் அவரது மனைவி மீனாட்சி. அதற்குள் கருவை முள்செடிக்குள் சிக்கிய குழந்தைகள் கத்தி, கதறினர். அதைப் பார்த்த தாய் 3 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு கனவனைப் பார்க்க புறப்பட்டார். அதற்குள் வெற்றியப்பன் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பார்க்க போகாமல் இங்கேயே இருக்குறீகளே என்றதற்கு..
    அவரது பதில், அவ்வளது தூரம் போக எனது கையில் காசு இல்லை என்றார். என்ன செய்யும் இந்தக் குடும்பம். இவர்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி  வெற்றியப்பன் இறந்தார். அதோடு உரிமையாளர் காதர்மைதீனும் இறந்துவிட்டார்.