திங்கள், 30 மார்ச், 2015
வியாழன், 26 மார்ச், 2015
செவ்வாய், 24 மார்ச், 2015
செவ்வாய், 10 மார்ச், 2015
தென்னிந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண்மணி ராதாபாய்
(தென்னிந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண்மணி ராதாபாய் பற்றி மகளிர் தினத்தில் எழுதியகட்டுரை)
தன்னம்பிக்கை மனுஷி...
-எல்.முருகராஜ்.
ராதாபாய்.
தற்போது புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரியில் வரலாற்று துறைதலைவராக உள்ளார்.
வள்ளூவன் பார்வை என்ற பார்வை இல்லாதவர்களுக்கான இணையதளத்தின்வளர்சிக்காக உழைப்பவர்.
இந்த இடத்தை அடையவும் இந்த பொறுப்பை பெறவும் இவர் தந்திருக்கும்உழைப்பும் காட்டியிருக்கும் பொறுமையும் அசாத்தியமானது.
ராதாபாய் பிறந்த நான்காவது மாதத்திலேயே அவருக்கு பார்வையில் பிரச்னைஎன்பது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு தெரிந்தது, நான்கு வயது வந்தபோது இனிபார்வைகிடையாது என்பதும் புரிந்தது.ராதாபாய்க்கு தனக்கு என்ன நடக்கிறது ஏன் தடுமாறி நடக்கிறோம்,நடக்கும்போதே விழுகிறோம், தன்னைச்சுற்றி படர்ந்த இருள் விலகமால் இருப்பது ஏன் என்பது எதுவும் புரியவில்லை.
மெள்ள மெள்ள ராதாபாய்க்கு அனைத்தையும் புரியவைத்தவர் தந்தையும் தமிழாசிரியருமான கிருஷ்ணமூர்த்திதான்.சங்க இலக்கியம் முதல் பாரதியின் கவிதை வரை சகலமும் சொல்லிக்கொடுத்தார்.கல்வியின் முக்கியவத்துவத்தை மனதில் வலுவாக விதைத்தார்.மற்றவர்களால் செய்யமுடிந்ததை உன்னால் செய்யமுடியும் ஆனால் உன்னால் செய்ய முடிந்தை மற்றவர்களால் செய்யமுடியாது என்று சொல்லி சொல்லி ராதாபாயை நம்பிக்கை மிகுந்த பெண்மணியாக்கினார்.இதன் காரணமாக அப்போதைய எஸ்எஸ்எல்சி தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்றார்.
பின் குடும்ப சூழ்நிலை காரணமாக மேல்படிப்பு படிக்காமல் கைத்தொழில் கற்றுக்கொள்ளச் சென்றவரை நானாச்சு உன் படிப்பிற்கு என்று சொல்லி பிரியா என்பவர்தான் கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள்.
நார்மல் பிள்ளைகளோட இந்த பெண் எப்படி படிச்சு முன்னேறும்னு சந்தேகப்பட்ட முதல்வரே சந்தோஷப்படும்படி பிஏ பஸ்ட்கிளாஸ்ல பாஸ் பண்ணினேன் பிறகு அவுங்களே எம்ஏ வகுப்பில் சேர்த்துவிட பல்கலை அளவில் செகண்ட் கிளாஸ்ல பாஸ் செய்தேன்.
அப்புறமும் படிப்பு மேல உள்ள தாகம் அடங்கலை பாரதிதாசன் பல்கலையில் நேரடியாக ஆய்வுகட்டுரைகள் சமர்ப்பித்து பிஎச்டி(டாக்டரேட்) பட்டம் பெற்றேன்.
டாக்டரேட் பட்டம் வழங்கும் போதுதான் சொன்னார்கள் தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக டாக்டரேட் பட்டம் பெறும் முதல் பார்வை இல்லாத பெண் நான்தான் என்று, பெருமையாக இருந்தது.
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்து தற்போது வரலாற்று துறை தலைவராக இருக்கிறேன்.
எனது துறை என்று இல்லாமல் எல்லாத்துறை மாணவிகளிடமும் தன்னம்பிக்கையை வளர்ப்பதை முக்கியமாக செய்துவருகிறேன் அதுவே பார்வைஇல்லாத மாணவிகள் அதுவும் கிராமப்புற மாணவிகள் என்றால் அவர்களை தேடிப்போய் உற்சாகப்படுத்தி படிக்க வைத்துவருகிறேன்.
என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகள் என்று இல்லை எல்லோருக்குமான பொதுவான விஷயம் என்னவென்றால் நம்மிடம் இல்லாததை நினைத்து கவலைப்படுவதை விட இருப்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும்,நம்மிடம் இருக்கும் திறமையை வௌிப்படுத்த வேண்டும் மேலும் நாம் நம்மை எப்போதும் ஏதோ ஒரு ஆரோக்கியமான ஆக்கபூர்வமான சமூகத்திற்கு பயன்தரக்கூடிய மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயங்களில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.
எனது கம்ப்யூட்டரில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம் நிறைய தேடி தேடி கம்ப்யூட்டர் உதவியுடன் படித்துக்கொண்டு இருப்பேன்.பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பேசுவேன்.
என்னைப்பார்த்தாலே நம்பிக்கை வருகிறது என கல்லூரியில் பேசப்போகும் போது மாணவியர் கூறுவார்கள் உண்மைதான் நான் என் பார்வை இல்லாத கண்களை கண்ணாடி போட்டு கூட மறைப்பது இல்லை இதுதான் நான் என்று நம்பிக்கையுடன் வாழ்கிறேன் நான் சார்ந்த பெண் சமுதாயம் கல்வி அறிவோடு சிறப்பாக வாழவும் வாழ்நாள் முழுவதும் முயற்சிப்பேன்.
ராதாபாய் பேசி முடித்த போது தன்னம்பிக்கை எனும் புதுரத்தம் பாய்ந்நது போன்ற உணர்வு.அவருடன் பேசுவதற்கான எண்:9003462218.(பேசுபவர்கள் அவரது கல்லூரி நேரம் தவிர்த்து இரவு 7 மணி முதல் 10 மணிக்குள்ளாக பேசலாம்.)
நன்றி:தினமலர்.காம்/நிஜக்கதை
முந்தைய நிஜக்கதைகளை படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
முந்தைய நிஜக்கதைகளை படிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
சனி, 7 மார்ச், 2015
வியாழன், 5 மார்ச், 2015
புதன், 4 மார்ச், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)