வெள்ளி, 5 ஜூலை, 2013

ஈழத்தமிழர்களை பாராட்ட இசைந்துள்ளார் அதிமுக எம்எல்ஏ

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் ஜூலை 6-ம் தேதி ஒரு விழா நடைபெறுகிறது. அந்த முகாம் மக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற தமிழகத்தில் உள்ள முகாம் மாணவர்கள் பாராட்டப்பட உள்ளனர். இவர்களை ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன் (அதிமுக) பாராட்டுகிறார். மாணவர்கள் எந்த வழிக் கல்வியில் பயின்றார்கள் என்பது தெரியாது. அந்த கட்சியில் இவர் ஒருவர்தான் தமிழ் குறித்து அதிகம் பேசுவார்